தீபாவளி பண்டிகை - அரசியல் தலைவர்களின் வாழ்த்து
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி, தமிழிசை செந்தரராஜன், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி, தமிழிசை செந்தரராஜன், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தித்திக்கும் இனிய தீபாவளித் திருநாளில், மக்கள் அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகட்டும் எனக் கூறியுள்ளார். அத்துடன், இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றும் நிலைத்திருக்கட்டும் எனவும் மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்பமுடன் வாழ்ந்திட வேண்டும் என மனதார வாழ்த்துவதாகவும் கூறியுள்ளார்.
பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாதி, மத பேதங்களைக் கடந்து கொண்டாடப்படும் தீபாவளித் திருநாள், அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுவர வாழ்த்துவதாக கூறியுள்ளார். பிரதமர் மோடியின் 'சுய சார்பு இந்தியா' கொள்கையைப் பின்பற்றி தீபாவளியைக் கொண்டாடுவோம் எனவும் இந்தக் கொண்டாட்டம் பாரத தேசத்தை பொருளாதார ரீதியில் உயர்த்துவதாக இருக்கட்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலா விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கேப்டன் நம்மிடையே இல்லை என்ற சோகம் இருந்தாலும் அவர் நமது கொடியின் நடுவில் இருக்கும் தீப ஒளியாய் அனைவரின் உள்ளத்திலும் சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளார். ஒளிமயமான எதிர்காலத்தை நம்முடன் இருந்து வழிநடத்தி கனவு, லட்சியத்தை வெல்ல தீபாவளி நாளில் அனைவரும் கேப்டனை நினைத்து வணங்குவோம் எனவும் கூறியுள்ளார்...
What's Your Reaction?