வீட்டுவசதி வாரிய வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு - உச்சநீதிமன்றத்தில் ஐ.பெரியசாமி மேல்முறையீடு...

ஐ.பெரியசாமி வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்ப்பு

Mar 14, 2024 - 12:17
வீட்டுவசதி வாரிய வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு - உச்சநீதிமன்றத்தில் ஐ.பெரியசாமி மேல்முறையீடு...

வீட்டுவசதி வாரிய வீடு ஒதுக்கீடு தொடர்பான முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலரான கணேசனுக்கு ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அப்போது வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறி, 2012-ம் ஆண்டு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் வழக்கிலிருந்து அவரை விடுவித்து உத்தரவிட்டது. ஆனால் இதை மறுஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தார். மேலும் முறையாக ஒப்புதல் பெற்று ஐ.பெரியசாமி மீதான முறைகேடு வழக்கை நடத்தவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஆணை பிறப்பித்தார். இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow