அனிமேஷனில் கலக்க வரும் பாகுபலி.. டிஸ்னி ஹாட் ஸ்டாரில் பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்.. மே 17ல் ரிலீஸ்

பாகுபலி உலகை விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல் உறுதியளிக்கும் கதையையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம் - S.S.ராஜமௌலி.

May 8, 2024 - 17:17
அனிமேஷனில் கலக்க வரும் பாகுபலி..  டிஸ்னி ஹாட் ஸ்டாரில் பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்.. மே 17ல் ரிலீஸ்

புகழ் பெற்ற பாகுபலி திரைப்படத்தின் prequal அதாவது முன்கதை, அனிமேஷன் வடிவில் இணைய தொடராக வெளிவரவுள்ளது.  

கிராஃபிக்ஸ் இந்தியா மற்றும் ஆர்கா மீடியாவொர்க்ஸ் தயாரிப்பில், S.S. ராஜமௌலி மற்றும் ஷரத் தேவராஜன் வழங்கும் இந்த இணைய தொடருக்கு பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட் எனப்பெயரிடப்பட்டுள்ளது. வருகிற மே 17ஆம் தேதி பிரத்தியேகமாக  டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் இணைய தொடராக ஒளிப்பரப்ப பட உள்ளது. 

ஹாலிவுட்டுக்கு நிகரான இந்திய படைப்பான பாகுபலி, ஒரு இதிகாச காவியமாக ரசிகர்களை கவர்ந்த திரைப்படமாகும். 2015ல் முதல் பாகமும், 2ஆம் பாகம் 2017லிலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இதில் மகிழ்மதியின் ராஜ்ஜியத்தை ஆள சூழ்ச்சிகளால் எப்படி பல்வாள் தேவன் பாகுபலியை வீழ்த்தினான். அதற்கு எப்படி பாகுபலியின் மகன் பழி தீர்த்து மகிழ்மதியை மீட்டான் என்பது மையக்கதையாகும்.

இந்நிலையில், பாகுபலி திரைப்படத்தின் கதை துவங்குவதற்கு முன், பாகுபலி - பல்வாள் தேவன் இணைந்து எவ்வாறு மகிழ்மதியை காப்பாற்றினர். அப்போது என்னென்ன சிக்கல்கள் இருந்தது, எந்த மாதிரியான சூழ்ச்சிகள் இருந்தது, எப்படியான சூழல் இருந்தது என்பதை அனிமேஷன் வடிவில் விவரிக்கிறது பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட். 

திரையில் இந்த மாபெரும் இதிகாச கதையை ரசிகர்கள் கண்டு ரசித்த நிலையில், அவர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அனிமேஷன் வடிவில் தயாரிக்கப்பட்டு பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட் வெளிவரவுள்ளது. இந்நிலையில், படத்தின் வெளியீட்டு நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்துகொண்டு பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளனர். 

கிராஃபிக் இந்தியா மற்றும் ஆர்கா மீடியாவொர்க்ஸ் புரொடக்‌ஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும்  பாகுபலி பட இயக்குநர் S.S.ராஜமௌலி, ஷரத் தேவராஜன் & ஷோபு யார்லகட்டா, ஜீவன் J.காங் மற்றும் நவின் ஜான் ஆகியோர் இணைந்து இந்த இணைய தொடரை தயாரித்துள்ளனர். இதனை ஜீவன் J.காங் மற்றும் நவின் ஜான் இயக்கியுள்ளனர். 

இந்நிகழ்ச்சியில் பேசிய பாகுபலி இயக்குநர் S.S.ராஜமௌலி, பாகுபலி உலகை விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல் உறுதியளிக்கும் கதையையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்றார்.

பாகுபலி கிரவுன் ஆஃப் பிளட் படத்தின் இணை-படைப்பாளரும், எழுத்தாளரும், தயாரிப்பாளருமான ஷரத் தேவராஜன் பேசுகையில், இந்த தொடருக்கு உயிர் கொடுப்பது எங்கள் அனைவருக்கும் ஒரு உற்சாகமான பயணம் என்றார். மேலும், நாங்கள் இந்த திட்டத்தை முதன்முதலில் தொடங்கும்போதே பாகுபலி பட உரிமையாளரின் மரபுக்கு ஏற்ப வாழக்கூடிய ஒரு அனிமேஷன் தொடரை உருவாக்கும் ஒரு பெரிய பொறுப்பை ஏற்றுக்கொள்கிறோம் என்று எனக்கு தெரியும். 

மகிழ்மதியின் சொல்லப்படாத கதைகள் மற்றும் மறைந்திருக்கும் ரகசியங்களை ஆராய்வதன் மூலம் திரைப்படங்களின் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் அனிமேஷன் காட்சிகள், சிக்கலான கதாபாத்திரங்கள் மற்றும் அனைவருக்கும் ஏற்ற கதையாக 'பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட். ' உருவாகியுள்ளது என்றார். 

இந்த இணைய தொடரில் பாகுபலிக்கு பின்னணி குரல் கொடுத்த நடிகர் ஷரத் கேல்கர், “நான் நிறைய கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறேன், ஆனால் "பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்” என் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. ஏனெனில் இந்த உரிமையுடனான எனது தொடர்பு மிகவும் நீண்டதாகும்.  இந்தக் கதாபாத்திரத்திற்கு மீண்டும் உயிர் கொடுப்பது ஒரு அற்புதமான உணர்வாகும் என்றார்.\

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow