Balakrishna: அடங்க மறுக்கும் பாலய்யா... பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான NBK 109 கிளிம்ப்ஸ்!

டோலிவுட்டின் மாஸ் ஹீரோவான பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 109வது படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Jun 10, 2024 - 13:42
Balakrishna: அடங்க மறுக்கும் பாலய்யா... பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான NBK 109 கிளிம்ப்ஸ்!

ஐதராபாத்: தெலுங்கு முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா இன்று தனது 64வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் அவரும் தனது ரசிகர்களுக்கு தரமான அப்டேட் கொடுத்து மிரள வைத்துள்ளார். டோலிவுட்டின் மாஸ் ஹீரோவான பாலய்யா, 60 வயது கடந்தாலும் ஆக்ஷனில் முரட்டு சம்பவங்கள் செய்து வருகிறார். பாலய்யா நடிப்பில் கடைசியாக ரிலீஸான அகண்டா, வீர சிம்ஹா ரெட்டி, பஹவந்த் கேசரி படங்கள் அனைத்தும் தாறுமாறான சம்பவங்கள் செய்தன. 

இந்தப் படங்களில் பாலகிருஷ்ணா அசால்ட்டாக செய்திருந்த ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டன. இருந்தாலும் அதற்கெல்லாம் கொஞ்சம் கூட அடங்காமல் தனது அடுத்தடுத்த படங்களிலும் அதே பாணியில் அதிரடி காட்டி வருகிறார். அதேபோல், சர்ச்சைகளிலும் பாலய்யா ரொம்பவே ஸ்பெஷலானவர் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் கூட ஒரு பட விழாவின் மேடையில் அஞ்சலியை பாலய்யா தள்ளிவிட்ட வீடியோ சோஷியல் மீடியாவை கலங்கடித்தது. அதற்கும் எந்தவித ரியாக்ஷனும் கொடுக்காமல் சைலண்ட் மோடில் இருந்தார் பாலகிருஷ்ணா. 

இந்நிலையில் இன்று பாலய்யா பிறந்தநாள் என்பதால், அவரது 109வது படம் பற்றிய அப்டேட் அபிஸியலாக வெளியாகியுள்ளது. அதன்படி, சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை பாபி கொல்லி இயக்குகிறார். தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கும் நிலையில், கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அது, பாலய்யாவின் ஹீரோயிசத்துக்கு ஹைப் கொடுக்கும் விதமாக வேற லெவலில் உருவாகியுள்ளது. அதேநேரம் வழக்கமாக டீசரிலேயே அதிர வைக்கும் வகையில் ஆக்ஷன் ட்ரீட் கொடுக்கும் பாலய்யா, NBK 109 க்ளிம்ப்ஸில் கொஞ்சம் அடக்கியே வாசித்துள்ளார். இருப்பினும் இந்தப் படத்தில் பாலய்யாவுக்கு தரமான ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என சொல்லப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow