Ajith: விடாமுயற்சிக்கு முன்பே குட் பேட் அக்லி ரிலீஸ்… அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

அஜித்தின் விடாமுயற்சிக்கு முன்பாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி ரிலீஸாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mar 25, 2024 - 13:05
Ajith: விடாமுயற்சிக்கு முன்பே குட் பேட் அக்லி ரிலீஸ்… அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

துணிவு வெற்றியைத் தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித். மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. விடாமுயற்சி ஷூட்டிங் ஏற்கனவே தாமதமாக தொடங்கிய நிலையில், இப்போது திடீரென பிரேக் விடப்பட்டதால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். லைகாவில் பட்ஜெட் பிரச்சினை காரணமாக தான் விடாமுயற்சி படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.  

இதனையடுத்து அஜித் தனது குழுவினருடன் பைக் டூர் செல்வதில் பிஸியாகிவிட்டார். கடந்த சில தினங்களாகவே அஜித் பைக் ட்ரிப் செல்லும் போட்டோஸ், வீடியோஸ் வைரலாகி வந்தன. இதனிடையே அஜித்தின் 63வது படம் பற்றிய அபிஸியல் அப்டேட்டும் சமீபத்தில் வெளியாகியிருந்தது. அதன்படி அஜித்தின் ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. குட் பேட் அக்லி என்ற டைட்டிலில் உருவாகவுள்ள இந்த மூவி, அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  

விடாமுயற்சி ஷூட்டிங் இன்னும் முடியாத நிலையில், குட் பேட் அக்லி எப்போது தொடங்கும் என ரசிகர்களிடம் கேள்வி எழுந்தது. அதேநேரம் இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால், விரைவில் படப்பிடிப்பை தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். இதனால் விடாமுயற்சிக்கு முன்பே குட் பேட் அக்லி ரிலீஸாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் விடாமுயற்சி ரிலீஸ் தேதி தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow