2026 ஜனவரி 7-முதல் சென்னையில் புத்தக கண்காட்சி : பபாசி அறிவிப்பு
சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி முதல் 13 நாட்கள் புத்தக கண்காட்சி நடைபெறும் என பபாசி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு புத்தக பிரியர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
கடந்த ஆண்டு 48-வது சென்னை புத்தகக் கண்காட்சி 2024 டிசம்பர் 27-ஆம் தேதி தொடங்கி 2025 ஜனவரி 12-ஆம் தேதி வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது, இது பபாசி (BAPASI) அமைப்பால் நடத்தப்பட்டது, மேலும் இந்த கண்காட்சியில் சுமார் 900 அரங்குகள் இடம்பெற்றிருந்தது மற்றும் 20 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை ஆகின.
2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள 49வது புத்தக கண்காட்சி எப்போதும்போலவே இந்தாண்டும் ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. சென்னை புத்தகக் காட்சி வரும் ஜனவரி 7 முதல் 19 வரை என 13 நாட்கள் பபாசி அறிவித்துள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் புத்தகக் காட்சி, இந்த ஆண்டும் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடைபெறவுள்ளது. இதில் சுமார் 900 அரங்குகள் அமைக்கப்படும் எனவும் அனைத்து நூல்களுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச நுழைவு டிக்கெட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்படலாம். விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8:30 மணி வரை புத்தக கண்காட்சி இயங்கும் எனவும் வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8:30 மணி வரை இயங்கும் எனவும் தெரிகிறது.
What's Your Reaction?

