சென்னையில் கொட்டித்தீர்த்த மழை- சாலைகள் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்
மழை காரணமாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( நவ.12) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பரவலாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகம் நோக்கி நகர்வதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொடர் மழை காரணமாக சென்னையில் இருந்து டெல்லி, மும்பை செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் 30 முதல் 45 நிமிடங்கள் வரை தாமதாகவும், ஐதராபாத் செல்லும் இண்டிகோ விமானம் 30 முதல் 35 நிமிடங்கள் தாமதமாகவும் இயக்கப்படுகிறது.மழை காரணமாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( நவ.12) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்த மழை காரணமாக சென்னையில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் மழை காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. இதனை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
What's Your Reaction?