Tamil Nadu HSC/+2 Result: தமிழில் சதமடித்த 35 கண்மணிகள்.. எந்த பாடத்தில் எத்தனை பேர் செண்டம் - முழு விபரம்

சென்னை: தமிழ்நாட்டில் + 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தமிழ் பாடத்தில் 35 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கணினி அறிவியல் பாடத்தில் 6996 மாணவர்களும், வணிகவியல் பாடத்தில் 6142 மாணவர்களும் 100% மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

May 6, 2024 - 10:25
Tamil Nadu HSC/+2 Result: தமிழில் சதமடித்த 35 கண்மணிகள்.. எந்த பாடத்தில் எத்தனை பேர் செண்டம் - முழு விபரம்

இந்த ஆண்டும் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள நிலையில், 94.56 சதவீத மாணவ மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு  0.53 சதவிகிதம் பேர் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் மாணவிகள் 96.44%, மாணவர்கள் 92% தேர்ச்சி பெற்றுள்ளனர்.. அரசு பள்ளிகளில் தேர்ச்சி விதிகம் 91.32 சதவிமாக உள்ளது. 2478 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 தமிழகத்தில் +12 தேர்வு முடிவுகள்  வெளியானது. இந்த ஆண்டு  தேர்வு எழுதிய  மாணவர்களின் எண்ணிக்கை 7,72,360 
 இந்த ஆண்டு  தேர்ச்சி சதவீதம்  -  94.56 

100% தேர்ச்சி பெற்ற  மேல்நிலைப்பள்ளிகள்  -  2 ,478

பள்ளி வாரியாக  மாணவர்களின் தேர்ச்சி விகிதம்   - 

அரசு பள்ளிகள்    - 91.32 %

அரசு உதவிப்பெறும் பள்ளிகள் -  95.49 %

தனியார் பள்ளிகள் - 96.7 %

மகளிர் பள்ளிகள்  - 96.39 %

ஆண்கள் பள்ளிகள்  -  86.96 %

 இருபாலர் பள்ளிகள் -  94. 7 %

மொத்தம் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 7,60,606, இவர்களில் மாணவிகளின் எண்ணிக்கை 4,08,440,மாணவர்களின் எண்ணிக்கை 3,52,165. மாணவர்களை காட்டிலும் 4.07 சதவிகிதம்  மாணவியர் அதிகம்

அரசு பள்ளிகள் இந்த ஆண்டு  91.02 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.49 சதவீதமும் தனியார் சுயநிதி பள்ளிகள் 98.70 சதவீதமும் மாணவ மாணவியர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

பாட வாரியாக தேர்ச்சி சதவிகிதம் இயற்பியல் பாடத்தில் 98.48 சதவீதமும், வேதியியல் பாடத்தில் 99.14 சதவீதமும், உயிரியியல் படத்தில் 9.35% தாவரவியல் பாடத்தில் 98.86 சதவீதமும் விலங்கியல் பாடத்தில் 99.04, சதவீதமும்,  கணினி அறிவியல் பாடத்தில் 99.80 சதவீதமும், வணிகவியல் பாடத்தில் 97.77 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ் பாடத்தில் 35 மாணவர்கள் 100% மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.  ஆங்கிலத்தில் ஏழு மாணவர்களும், இயற்பியலில் 633 மாணவர்களும், வேதியியல் பாடத்தில் போர் 471 மாணவர்களும், உயிரியல் பாடத்தில் 652 மாணவர்களும், கணித பாடத்தில் 2587 மாணவர்களும், தாவரவியல் பாடத்தில் 90 மாணவர்களும் விலங்கியல் பாடத்தில் 382 மாணவர்களும், கணினி அறிவியல் பாடத்தில் 6996 மாணவர்களும், வணிகவியல் பாடத்தில் 6142 மாணவர்களும் 100% மதிப்பெண்களும் பெற்று இருக்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow