முதல் ஆளாய் களத்தில் குதித்த நாம் தமிழர் கட்சி : 100 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் சீமான்
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 100 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கி விட்டன. தொகுதிகள், வேட்பாளர் தேர்வு, கூட்டணி உள்ளிட்ட ஆயத்த பணிகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே, தமிழக சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சியை அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேசப்பட்டது. எடப்பாடி பழனிசாமி சீமானுக்கு கூட்டணியில் சேர பல முறை அழைப்பு விடுத்தார். அதனை சீமான் ஏற்றுக் கொள்ளவில்லை. தனித்துப் போட்டியிடுவது என்பதில் அக்கட்சியின் தலைவர் சீமான் உறுதியாக உள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட உள்ள 234 வேட்பாளர்களையும் ஒரே நிகழ்வில் அறிமுகப்படுத்தும் மக்களின் மாநாடு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திருச்சியில் நடைபெறும் என நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழக சட்டசபையில் போட்டியிட உள்ள 100 வேட்பாளர்கள் அடங்கிய முதற் கட்ட பட்டியலை அக்கட்சியின் தலைவர் சீமான் இன்று வெளியிட்டுள்ளார்.
அந்த பட்டியலில் இடும்பாவனம் கார்த்திக் வேதாரண்யம் தொகுதியிலும், இயக்குநர் களஞ்சியம் ஆயிரம் விளக்கு தொகுதியிலும், வீரப்பனின் மகள் வித்யாராணி மேட்டூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
What's Your Reaction?

