வெறிநாய் தொல்ல தாங்க முடியல... நாய் முகமூடியுடன் மனு கொடுத்த நகர்மன்ற உறுப்பினர்
நாய் குறைக்கும் சத்தத்தை எழுப்பி நகர் மன்ற தலைவரிடம் கோரிக்கை மனுவை அளித்தார்.
தென்காசியில் வெறிநாய் தொந்தரவை கட்டுப்படுத்த வலியுறுத்தி நகராட்சி கூட்டத்தில் நாய் முகமூடி அணிந்தும், நாய் போல் குரைத்தும் மன்ற தலைவரிடம், உறுப்பினர் ஒருவர் நூதன முறையில் மனு அளித்திருப்பது கவனம் பெற்றது.
தென்காசி நகராட்சி கூட்டம் நகர்மன்ற தலைவர் சாதிர் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் 33 வார்டு நகர்ம்ன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்ட போது, தென்காசி நகரத்தை சுற்றி பல்வேறு பகுதிகளில் வெறிநாய்கள் தொந்தரவு அதிகரித்து காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த வலியுறுத்தும் வகையில், 20-வது வார்டை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் முகமது ரபிக் நாய் முகமூடி அணிந்து நகர் மன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு முதியவர் ஒருவரை நாய் கடித்து குதறிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமே நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாய் முகமுடி அணிந்து, நாய் குறைக்கும் சத்தத்தை எழுப்பி நகர் மன்ற தலைவரிடம் கோரிக்கை மனுவை அளித்தார்.
What's Your Reaction?