தொழில், நிதி மற்றும் ஆரோக்கியம்.. இன்றைய ராசிபலன் (நவ.13)
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்...
மேஷம்
நீங்கள் எதிர்பார்த்த நல்ல தகவல்கள் உற்சாகம் தரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் ஆதரவும், பழைய பாக்கி வசூலும் சிறக்கும். பணியிடத்தில் கருத்துகளுக்கு மதிப்பு கூடும், புதிய பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் நீண்ட நாள் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவுக்கு வரும். மாணவர்களுக்குப் படிப்புத் துறையில் கவனம் தேவை; உடல்நலத்தில் சிறிய சோர்வு வந்து நீங்கும்.
ரிஷபம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் எந்தவொரு முடிவையும் அவசரமாக எடுக்காமல் சிந்தித்துச் செயல்படவும். புதிய முதலீடுகளைத் தள்ளிவைப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் வரக்கூடும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகரிக்கலாம், முக்கிய ஆவணங்களை நிதானமாகக் கையாளவும். தம்பதியரிடையே சிறிய கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். மாணவர்கள் அமைதியுடன் படிப்பில் கவனம் செலுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்; இறை வழிபாடு மன அமைதியைத் தரும்.
மிதுனம்
புத்திசாலித்தனமும் பேச்சாற்றலும் உங்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் உத்தியோகத்தில் சிறந்து விளங்கலாம். வியாபாரத்தில் புதிய விற்பனை உத்திகள் கைகொடுக்கும். குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
கடகம்
மனதை வாட்டிவந்த கவலைகள் விலகி உற்சாகம் பிறக்கும். உத்தியோகத்தில் உங்களது திறமையை வெளிப்படுத்தும் நல்ல வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடக்கும். குடும்ப நலனுக்காக எடுக்கும் முடிவுகள் சாதகமான பலன் தரும். பணவரவு சீராக இருப்பதுடன் வீட்டில் சுபச்செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
சிம்மம்
உங்களது கடின உழைப்புக்கு அலுவலகத்தில் உரிய பாராட்டு கிடைக்கும். நிலுவையில் இருந்த அலுவலகக் கோப்புகள் முடிக்கப்படும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் மற்றும் சேமிப்புத் திட்டங்கள் குறித்த சிந்தனை மேலோங்கும். பெரியவர்களின் ஆலோசனைகள் நல்வழி காட்டும். பிள்ளைகளின் கல்வி பற்றிய நல்ல செய்தி தேடி வரும். கலைஞர்களுக்குத் திறமைகளை வெளிப்படுத்த சிறந்த தருணம் இது.
கன்னி
சிறிய முயற்சிகள் கூட பெரிய பலனைத் தரும். தொழில் ரீதியான ஆவணங்களைச் சரிபார்த்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் பொறுப்புகள் சற்று அதிகரிக்கக்கூடும். பழைய கணக்குகளைத் தீர்த்து நிம்மதி அடைவீர்கள். வீட்டைப் புதுப்பிக்கும் எண்ணம் கைகூடும். மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றி முன்னேறுவர்.
துலாம்
புதிய அனுபவங்களைத் தரும் நிகழ்வுகள் இன்று அரங்கேறும். உத்தியோகத்தில் இடமாற்றம் அல்லது புதிய பொறுப்புகள் தொடர்பான தகவல்கள் வரலாம். வியாபாரத்தில் விற்பனை பெருகி லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் குறித்துப் பேசப்படும். பெண்களுக்கும் மாணவர்களுக்கும் உயர்கல்வி மற்றும் தனிப்பட்ட திறமைகளை வளர்க்க நல்ல வாய்ப்புகள் அமையும்.
விருச்சிகம்
உங்களது சுய அனுபவத்தின் அடிப்படையில் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருந்த மறைமுகத் தடைகள் அகலும். பணப்பரிவர்த்தனைகளில் சற்று எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.
குடும்பத்தில் ஒருவரின் சாதனை உங்களுக்குப் பெருமை சேர்க்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு ஆறுதல் தரும். தியானம் செய்வதன் மூலம் மன அமைதி பெறலாம்.
தனுசு
எதிர்காலத் திட்டங்களுக்குத் தெளிவான வடிவம் கொடுக்கக்கூடிய நாள். உத்தியோகஸ்தர்கள் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றறிவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதால் பொருளாதார நெருக்கடி குறையும். வீட்டில் ஆன்மிக நிகழ்வுகள் மற்றும் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி பொங்கும்.
மகரம்
உங்கள் விடாமுயற்சி பலருக்கு முன்னுதாரணமாக அமையும். பணியிடத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் உங்களைத் தேடி வரும். புதிய கூட்டாளிகளுடன் இணைந்து வியாபாரத்தில் ஈடுபடலாம். சொத்து தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு பயனுள்ளதாக இருக்கும். உடல்நலத்தில், குறிப்பாக மூட்டு மற்றும் முதுகுப் பகுதியில் கவனம் தேவை.
கும்பம்
புதிய சிந்தனைகள் மற்றும் முயற்சிகளுடன் நாள் சுறுசுறுப்பாக நகரும். உத்தியோகத்தில் உங்களது தனித்துவமான செயல்பாடு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். வியாபாரத்தில் விளம்பர உத்திகள் மூலமாக வளர்ச்சி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் சில பயனுள்ள தகவல்கள் கிடைக்கும். வீட்டில் உள்ள இளையவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பெண்களுக்குப் புதிய கைத்தொழில் ஆர்வம் ஏற்படும்.
மீனம்
மனதில் படும் நல்ல காரியங்களைச் தைரியமாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒப்புதல் தடையின்றி கிடைக்கும். நீண்ட நாள் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் பணியிடத்தில் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபச் செய்தி வரக்கூடும். தம்பதிகளுக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். ஆன்மிகச் சிந்தனைகள் மனதை அமைதியாக வைத்திருக்க உதவும்.
What's Your Reaction?