ஜென்சன் ஹுவாங் AFFAIR விவகாரம் ! ஜென்சன் ராஜினாமா! NVIDIA - வின் இடைக்கால CEO நியமனம்!
Nvidia நிறுவன CEO ஜென்சன் ஹுவாங் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இடைக்கால CEO-வாக கோலெட் கிரெஸ் நியமிக்கப்பட்டுள்ளார்; நிறுவனத்தின் தலைமை மாற்றம், பங்குச் சந்தை சரிவு மற்றும் புதிய நிர்வாக அறிவிப்புகள் குறித்து அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
உலகின் முன்னணி AI சிப் தயாரிப்பு நிறுவனமான Nvidia-வில் அதிரடி தலைமை மாற்றம் ஏற்பட்டுள்ளது. நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஜென்சன் ஹுவாங் தனது பதவிகளில் இருந்து உடனடியாக விலகியுள்ள நிலையில், நிறுவனத்தின் CFO கோலெட் கிரெஸ் இடைக்கால CEO-வாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்ச்சைகளுக்கு மத்தியில் ஜென்சன் ஹுவாங் ராஜினாமா!
Nvidia நிறுவனத்தின் தலைவர், தலைமை செயல் அதிகாரி மற்றும் இயக்குநர் குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் இருந்து ஜென்சன் ஹுவாங் உடனடியாக விலகியுள்ளதாக அந்நிறுவனத்தின் இயக்குநர் குழு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிகாரிகளின் விசாரணையில் சீன உளவுத்துறையுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட ஒரு பெண்ணுடன் ஜென்சன் ஹுவாங் தொடர்பில் இருந்ததாக வெளியான தகவல்கள், நிறுவனத்தின் மீதான கவனத்தை அதிகரித்தன. இதற்கிடையில், Nvidia நிறுவனத்தின் சுகாதாரப் பிரிவு துணைத் தலைவரான கிம்பர்லி பவலுடனும் ஹுவாங் தொடர்பில் இருந்ததாக வெளியான மற்றொரு தகவல் சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியது. கிம்பர்லி பவல் நேரடியாக ஹுவாங்கின் கீழ் பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரங்கள் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், ஹுவாங் தனது பதவிகளில் இருந்து விலகியுள்ளார்.
Nvidia பங்குகள் சரிவு.. ரூ.500 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு இழப்பு அபாயம்!
ஜென்சன் ஹுவாங் Nvidia நிறுவனத்தின் இணை நிறுவனராகவும், சுமார் 3.61 சதவீத பங்குகளை வைத்திருக்கும் நான்காவது பெரிய முதலீட்டாளராகவும் இருந்து வந்தார்.
அவரது ராஜினாமா அறிவிப்பைத் தொடர்ந்து Nvidia நிறுவனத்தின் பங்குகள் 13 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் நிறுவனத்தின் சந்தை மதிப்பில் சுமார் 500 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான இழப்பு ஏற்படும் அபாயம் உருவானது.
Nvidia பங்குகளின் சரிவு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட உலகளாவிய பங்குச் சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இடைக்கால CEO-வாக கோலெட் கிரெஸ் நியமனம்!
ஜென்சன் ஹுவாங் விலகியதைத் தொடர்ந்து, Nvidia நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவரும் தலைமை நிதி அதிகாரியுமான கோலெட் கிரெஸ் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து CFO பொறுப்பையும் வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிரந்தர CEO நியமிக்கப்படும் வரை நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புகளை கோலெட் கிரெஸ் கவனிப்பார்.
Nvidia நிறுவனத்தின் இயக்குநர் குழு, புதிய தலைமை செயல் அதிகாரியைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. நிறுவனத்தின் தற்போதைய நிர்வாகிகள் மற்றும் வெளிப்புற பங்குதாரர்களும் இந்தத் தேர்வில் பரிசீலிக்கப்பட உள்ளனர்.
யார் இந்த கோலெட் கிரெஸ்?
Nvidia நிறுவனத்தில் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இணைந்த கோலெட் கிரெஸ், நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர்.
Nvidia நிறுவனத்திற்கு வருவதற்கு முன்பு, சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக மைக்ரோசாப்ட், சிஸ்கோ உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் நிதி நிர்வாகம் தொடர்பான உயர்நிலைப் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
நிறுவன நிதி மேலாண்மை, வணிகத் திட்டமிடல், செயல்பாட்டு நிர்வாகம் மற்றும் கார்ப்பரேட் உத்திகள் ஆகிய துறைகளில் நீண்ட அனுபவம் கொண்டவர்.
Nvidia நிறுவனத்தில் அவர் இணைந்த காலகட்டத்தில், கணினி கிராபிக்ஸ் சிப்களை தயாரிப்பதில் முக்கியத்துவம் பெற்றிருந்த நிறுவனம், பின்னர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை ஆதாரமாக விளங்கும் சிப்களை தயாரிக்கும் உலகளாவிய நிறுவனமாக மாறியது.
இந்த மாற்றத்தின் போது நிறுவனத்தின் நிதி நிர்வாகத்திலும் வளர்ச்சியிலும் கோலெட் கிரெஸ் முக்கிய பங்காற்றியுள்ளார்.
Nvidia வளர்ச்சியை தொடர்ந்து முன்னெடுப்பேன் - கோலெட் கிரெஸ்!
இடைக்கால CEO பொறுப்பேற்றுள்ள கோலெட் கிரெஸ், ஜென்சன் ஹுவாங் உருவாக்கிய நிறுவனத்தின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்துவதே தனது நோக்கம் என தெரிவித்துள்ளார்.
நிறுவனத்தின் தலைமை நிர்வாகக் குழுவுடன் இணைந்து, கடந்த 33 ஆண்டுகளாக ஹுவாங் உருவாக்கிய வலுவான அடித்தளத்தின் மீது Nvidia நிறுவனத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல உறுதிபூண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், செயற்கை நுண்ணறிவு மற்றும் Accelerated Computing தொழில்நுட்பங்களில் Nvidia தொடர்ந்து முன்னேற்றம் காணும் என்றும், வாடிக்கையாளர்கள், கூட்டாளர்கள், டெவலப்பர்கள் மற்றும் பங்குதாரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Nvidia நிறுவனத்திற்கு முதல் முறையாக Board Chair!
நிறுவனத்தின் தலைமை மாற்றத்துடன் மற்றொரு முக்கிய அறிவிப்பையும் Nvidia வெளியிட்டுள்ளது.
ஹார்வி சி. ஜோன்ஸ் (Harvey C. Jones) நிறுவனத்தின் முதல் Board Chair ஆக நியமிக்கப்பட்டுள்ளார். தொழில்முனைவோர், தொழில்நுட்ப நிர்வாகி மற்றும் முதலீட்டாளர் என 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், Synopsys நிறுவனத்தின் CEO மற்றும் Executive Chairman ஆகவும் பணியாற்றியுள்ளார்.
கோலெட் கிரெஸ் நிறுவனத்தின் வணிகம், வாடிக்கையாளர்கள், செயல்பாடுகள் மற்றும் நிதிநிலை குறித்து ஆழமான புரிதல் கொண்டவர் என ஹார்வி ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், அனுபவமிக்க நிர்வாகக் குழுவின் ஆதரவுடன் Nvidia நிறுவனத்தின் செயல்பாடுகள், வாடிக்கையாளர் ஒப்பந்தங்கள் மற்றும் தயாரிப்பு திட்டங்கள் எந்தவித இடையூறும் இன்றி தொடரும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
ஜென்சன் ஹுவாங்கிற்கு Nvidia இயக்குநர் குழு நன்றி!
Nvidia நிறுவனத்தை உலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக உருவாக்கியதில் ஜென்சன் ஹுவாங்கின் பங்களிப்பை இயக்குநர் குழு பாராட்டியுள்ளது.
அவரது தலைமையில் Nvidia நிறுவனம் கணினி கிராபிக்ஸ் துறையிலிருந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முன்னணி சக்தியாக வளர்ந்ததை குறிப்பிட்டு, தொழில்நுட்ப உலகிற்கு அவர் அளித்த பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
நவம்பர் 17-ல் Nvidia நிதி முடிவுகள்!
Nvidia நிறுவனத்தின் 2027 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு நிதி முடிவுகள் நவம்பர் 17-ம் தேதி வெளியிடப்பட உள்ளன.
அமெரிக்க பசிபிக் நேரப்படி பிற்பகல் 1.20 மணியளவில் நிதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும், தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு முதலீட்டாளர்களுக்கான Earnings Call நடைபெறும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தலைமை மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிதி முடிவுகள் வெளியீட்டு அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை என Nvidia உறுதிப்படுத்தியுள்ளது.
What's Your Reaction?