கிடைத்தது சென்சார் சர்டிபிகேட்:சிவகார்த்திகேயன் பராசக்தி நாளை ரிலீஸ்

நீண்ட இழுபறிக்கு பிறகு பராசக்தி திரைப்படத்திற்கு சென்சார் போர்டு சர்டிபிகேட் வழங்கியுள்ளது. இதனால் திட்டமிட்டபடி நாளை சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ் ஆவதால் அவரது ரசிகர்களுக்கு பொங்கல் பண்டிகை மகிழ்ச்சியாக அமைந்துள்ளது. 

கிடைத்தது சென்சார் சர்டிபிகேட்:சிவகார்த்திகேயன் பராசக்தி நாளை ரிலீஸ்
Censor certificate received

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘பராசக்தி’. ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார். இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட பல விஷயங்களை மையமாக கொண்டு 60களில் நடக்கும் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ள

படம் ஜனவரி 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தை போல ‘பராசக்தி’ படத்துக்கும் சென்சார் பிரச்சினை எழுந்துள்ளது. ‘பராசக்தி’ படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், எட்டு முதல் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நீக்கங்களை செய்ய அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அதை நீக்க இயக்குநர் சுதா கொங்கரா மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படத்துக்கு சென்சார் சான்றிதழ் இன்னும் வழங்கப்பட இருந்தது. 

இதனால், பராசக்தி திரைப்படம் நாளை வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. இந்த நிலையில் நேற்று நடந்த பராசக்தி பட ப்ராமேஷன் நிகழ்ச்சியில் நல்லதே நடக்கும் என சிவகார்த்திகேயன் பேசியிருந்தார். இந்த நிலையில் யுஏ சான்றிதழை சென்சார் சர்டிபிகேட் வழங்கியுள்ளது. இதனால் படம் நாளை திட்டமிட்டபடி ரிலீஸ் ஆக உள்ளதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow