ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல் : சென்சார் போர்டு மேல்முறையீடு:சட்டப்படி எதிர்கொள்வோம்:தவெக வழக்கறிஞர்
ஜனநாயகன் திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்க நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக சென்சார் போர்டு மேல்முறையீடு செய்துள்ளது. இதனை சட்டப்படி எதிர்கொள்வோம் என தவெக வழக்கறிஞர் தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்திற்கான சென்சார் சான்றிதழ் உடனடியாக வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தவெக வழக்கறிஞர் சக்கரவர்த்தி சென்னை உயர்நீதிமன்ற வாசலில் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஜனநாயகன் படத்தை பார்த்து விட்டு சென்சார் சான்றிதழ் வழங்காமல் தணிக்கை குழுவினர் காலம் தாழ்த்தி வந்தனர். விஜய் ரசிகர்களின் கொண்டாட்டத்தை தடுக்கும் வகையில் சென்சார் போர்டு செயல்பட்டு வந்தது. பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்ட்டது. சென்சார் போர்டு குழுவினர் ஏற்கனவே படம் பார்த்து விட்டு சான்றிதழ் தராமல் இழுத்தடிக்ககூடாது. அவர்களுக்கு அதிகார வரம்பு இல்லை. உடனடியாக சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு விஜய் ரசிகர்கள், தமிழக மக்கள் கொண்டாடி வருகின்றனர். இரு தரப்பு வாதங்களை கேட்டு தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றே படத்தை வெளியிட விடாமல் தடுக்கப்படுகிறது. விஜய்யின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் இது போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு சென்றாலும் அதனை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுகிறது. தீர்ப்பு ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தீர்ப்பு முழு விவரம் வெளிவந்த பிறகு ஆலோசிப்போம். படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து படத்தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்யும்" என்று வழக்கறிஞர் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
கேரளாவில் 14-ல் ரிலீஸ்
தமிழகத்தில் இன்று வெளியாக இருந்த ஜனநாயகன் திரைபடம் சென்சார் சர்டிபிகேட் கிடைக்காத காரணத்தால் வெளியாக வில்லை. ஜனவரி 14-ம் தேதி கேரளாவில் ஜனநாயகன் ரிலீஸ் செய்யப்படும் என விநியோகஸ்தர்கள் அறிவித்துள்ளனர்.
What's Your Reaction?

