டிச.12-ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் விழா : விடுப்பட்ட மகளிருக்கு உரிமை தொகை திட்டம் : ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

மகளிர் உரிமைத் தொகை திட்டம் கூடுதல் பயனாளிகளுடன் வருகிற டிசம்பர் 12-ஆம் தேதி சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் மகளிர்களுக்கு ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

டிச.12-ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் விழா : விடுப்பட்ட மகளிருக்கு உரிமை தொகை திட்டம் : ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
Ceremony at Nehru Indoor Stadium on Dec. 12

கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் 1.14 கோடி மகளிருக்கு உரிமை தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. 

இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும்  நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 28 லட்சம் மகளிர் உரிமை கோரி விண்ணப்பித்தனர்.

இதனிடையை சிவகாசியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணைமுதல்வர் உதயநிதி:  "கடந்த இரண்டரை ஆண்டுகளாக 1.15 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. பெண்கள் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் தடைகளையும் தாண்டி தமிழகம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

தற்போதைய சூழலில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் பெறப்பட்ட லட்சக்கணக்கான மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.கடந்த 27 மாதங்களாக ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இந்த மாதம்12-ம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். பெண்கள் விடுதலைக்காக முதன்முதலில் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். பெரியாரின் சிந்தனைகளை சட்டமாக்கியவர்கள் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர். 

 உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்தது முத்தமிழறிஞர் கலைஞர். இந்தியாவில் முதன்முதலில் தமிழகத்தில் பெண் காவலர்களை நியமித்ததே கலைஞர்தான். தற்போது மகளிர் கட்டணமில்லா மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட மகளிர் வளர்ச்சி திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு கொண்டு வந்துள்ளது,"என பேசியுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow