அமைச்சர் பெரிய கருப்பன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை

சிவகங்கை நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு நான்கு வார காலம் இடைக்கால தடை விதித்து உத்தரவு

Jan 19, 2024 - 16:49
Jan 19, 2024 - 18:34
அமைச்சர் பெரிய கருப்பன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை

தமிழக அமைச்சர் பெரிய கருப்பன் மீதான குற்ற வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் பட்டமங்கலம் என்ற இடத்தில் திமுக - அதிமுகவினரிடையே நடந்த மோதலில் பெரியகருப்பன் உட்பட எட்டு திமுகவினர் பேர் மீது திருக்கோஷ்டியூர் காவல்நிலையத்தில் குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் பெரிய கருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் பெரிய கருப்பன் சார்பில் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் ஆஜராகி, சம்பவம் நடந்த போது அந்த இடத்தில் அமைச்சர் பெரிய கருப்பன் இல்லை என்றும், இவருக்கும் அந்த சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என்றும் வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு சிவகங்கை நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு நான்கு வார காலம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow