Tamilnadu : முழு வீச்சில் கூட்டணிப் பேச்சுவார்த்தை... Busy ஆகும் கட்சி அலுவலகங்கள்!
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 4 முனைப் போட்டி நிலவுகிறது
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி அமைப்பது மற்றும் தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வது குறித்த பேச்சுவார்த்தைகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் பரபரப்பாகி இருக்கின்றன.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட இருக்கிறது. திமுக கூட்டணி ஏற்கனவே கிட்டத்தட்ட இறுதியாகி, தொகுதிப் பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தைகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் திமுக கூட்டணி போட்டியிடும் இடங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக தரப்பிலும் தேமுதிகவும் பாமகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. பாஜகவிலோ முதற்கட்ட வேட்பாளர் பட்டியலே ஒருபக்கம் வெளியான நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தையும் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், அதிமுக சார்பில் பாமக மற்றும் தேமுதிகவுடன் இன்று (மார்ச் 06) பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் தொகுதிப் பங்கீடுகள் தொடர்பாகவும் பாமக மற்றும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. இதேபோல், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பாஜக தரப்பில் தேர்தல் குழு வேட்பாளர்களை இறுதி செய்ய டெல்லி செல்லவுள்ளனர். இதனால் தமிழ்நாட்டின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
What's Your Reaction?