இப்படி பண்ணக் கூடாது... ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அட்வைஸ்...
பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது.
சென்னை வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில் போக்குவரத்து காவல்துறை சார்பில், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில், வேப்பேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டிவேலு தலைமையிலான போக்குவரத்து போலீசார், சாலையில் சென்ற ஆட்டோ ஓட்டுனர்களை அழைத்து சாலை விதிகளை முறையாக கடைபிடிப்பது குறித்து அறிவுரை வழங்கினார்.
இதனையடுத்து, ஆட்டோ ஓட்டுநர்கள் சுத்தமான சீருடையில் வாகனம் ஓட்ட வேண்டும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும், பொதுமக்களிடம் கூடுதலாக பணம் கேட்கக் கூடாது, ஒரு வழி பாதையில் செல்லக்கூடாது, காவல்துறைக்கு உதவியாக பள்ளி, மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பது தொடர்பான போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலும் ஆட்டோவில் அனுமதிக்கப்பட்ட நபர்களை விட கூடுதலாக நபர்களை ஏற்றக் கூடாது, முறையான ஆவணங்கள் இல்லாமல் ஆட்டோ ஓட்டக்கூடாது பொதுமக்கள் ஆட்டோவில் தவறவிட்ட உடமைகளை அவர்களிடம் சேர்ப்பதற்கு காவல்துறையை அணுகி ஒப்படைக்க வேண்டும் என்பது போன்ற அறிவுரைகளையும் போக்குவரத்து காவல்துறையினர் வழங்கினர்.
What's Your Reaction?