ரஜினி உடல்நிலை... அமைச்சர் மா.சுப்ரமணியன் பிரத்யேக பேட்டி!
ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் குமுதம் செய்திகளுக்காக பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
கடந்த மாதம் 28ம் தேதி விசாகப்பட்டினத்தில் இருந்து கூலி படப்பிடிப்பு முடித்துவிட்டு சென்னை திரும்பினார். கூலி படப்பிடிப்பில் மழை காட்சியில் நடித்த போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன்காரணம் அடுத்த கட்ட நடவடிக்கையாக மருத்துவர்களிடம் கலந்தாலோசித்து விட்டுத் மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
அடி வயிறு வீக்கம், முதுகு பிரச்னைகளுக்காக தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதய சிகிச்சை நிபுணரின் பரிசோதனைக்கு பின்னரே ரஜினியின் அடுத்த கட்ட சிகிச்சை குறித்தும், எத்தனை நாட்கள் மருத்துவமனையில் இருக்கலாம் என்பது குறித்தும் தகவல் வெளியாகும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் குமுதம் செய்திகளுக்காக பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “நடிகர் ரஜினிகாந்திற்கு பெரிய அளவிலான அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை. அவரின் உடல்நிலை சீராகவே உள்ளது. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அச்சப்பட கூடிய அளவில் எதுவும் இல்லை. ரஜினிகாந்திற்கு திட்டமிட்ட மருத்துவ பரிசோதனையே நடைபெற்று வருகிறது. தமிழக மருத்துவ துறை அதிகாரிகளும் அப்பல்லோ மருத்துவ முறையுடன் தொடர்பில் உள்ளனர்” என்று குமுதம் செய்திகளுக்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொலைபேசி வாயிலாக பிரத்யேகமாக தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?