தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் திடீர் ராஜினாமா-பின்னணி என்ன?

தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

Jan 10, 2024 - 18:34
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் திடீர் ராஜினாமா-பின்னணி என்ன?

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக தமிழக முதலமைச்சருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். 

கடந்த 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு பிறகு திமுக அரசு பொறுப்பேற்றது.இதையடுத்து தலைமை வழக்கறிஞராக கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட விஜய் நாராயண் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை தொடர்ந்து புதிய அரசு பதவியேற்றதும் மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரத்தை அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்க ஆளுநருக்கு அரசு பரிந்துரை செய்தது. 

தமிழக அரசின் பரிந்துரையை ஏற்ற அப்போதைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக சண்முக சுந்தரத்தை நியமிக்க 2021 மே மாதம் ஒப்புதல் வழங்கினார்.இதையடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசின் சட்ட ஆலோசகராகவும், நீதிமன்றத்தில் அரசின் சார்பில் வழக்குகளை திறம்பட கையாண்டு வந்தார். 

இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும், வழக்கறிஞர்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றும் அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொடர்ந்து தொழில் புரிய போவதாகவும் அறிவித்துள்ளார். 

முன்னதாக, தனது ராஜினாமா கடிதத்தை தமிழக முதலமைச்சருக்கும் அனுப்பி வைத்தார். இதையடுத்து, ஒருசில நாட்களில் தமிழக அரசு புதிய தலைமை வழக்கறிஞரை நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow