நாடு முழுவதும் இன்று நடைபெறும் நீட் தேர்வு - இப்போ என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா?

இன்று (5-5-2024) நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளான M.B.B.S. மற்றும் B.D.S-க்கான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டவுள்ளது. இந்த தேர்வுகளுக்காக பல்வேறு கட்டுப்பாடுகளையும் தேசியத் தேர்வு முகமை விதித்துள்ளது. 

May 5, 2024 - 09:59
நாடு முழுவதும் இன்று நடைபெறும் நீட் தேர்வு - இப்போ என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா?

நாடுமுழுவதும் 557 நகரங்கள் மற்றும் 14 வெளிநாடுகளில் நீட் தேர்வு நடக்கவுள்ளது. மதியம் 2 மணிக்கு தொடங்கும் தேர்வுகள் மாலை 5.20 மணி வரையிலும் நடைபெறும். இதனை சுமார் 24 லட்சம் மாணவர்கள் எழுத இருக்கின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வுகளை எழுத இருக்கின்றனர். 720 மதிப்பெண்ணுக்கு நடைபெறும் நீட் தேர்வுகள், இந்தி, தமிழ், மலையாளம் உள்பட 13 மொழிகளில் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தேர்வுக்கான விதிமுறைகள் முழுவதும் neet.ntaonline.in என்ற இணையதளத்தில் விரிவாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில், AI தொழில்நுட்பம் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் மூலம் தேர்வர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். முன்னதாக நீட் தேர்வுக்கான விண்ணப்பத்தின் போதே கைரேகை பதிவுகள் எல்லாம் செய்யப்பட்டு இருக்கின்றன. 

தேர்வு 2மணிக்கு தொடங்கவுள்ள நிலையில், 1.30மணிக்கு முன்னரே உள்ளே வர தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எளிமையான ஆடை மட்டுமே அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், பாரம்பரிய ஆடைகளை அணிந்து வருவோர் சோதனைக்கு ஏற்றார் வகையில் 12.30 மணிக்கே தேர்வு அறைகளுக்கும் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தண்ணீர் பாட்டில்களை கொண்டு வருவோர் தெளிவாக தெரியும் வண்ணம் உள்ள பாட்டில்களை எடுத்துச்செல்ல மட்டுமே அனுமதியுண்டு. தேர்வு தொடங்கிய முதல் அரை மணி நேரத்திலும், கடைசி அரை மணி நேரத்திலும் தேர்வர்கள் கழிவறை செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் கட்டுப்பாடுகள் இருக்கிறது. 

மேலும், தேர்வர்கள் எலக்ட்ரானிக் டிவைஸ்கள், நகைகள், போன்றவற்றை கொண்டு செல்ல அனுமதி கிடையாது. இந்நிலையில், முறைகேட்டில் ஈடுபடும் நபர்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow