"குழந்தை உயிரே முக்கியம்" பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான சிறுமியின் கருவைக் கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி..

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 14 வயது சிறுமியின் உடல் மற்றும் மனநிலையை கருத்தில்கொண்டு அவரது கருவைக் கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Apr 22, 2024 - 12:25
"குழந்தை உயிரே முக்கியம்" பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான சிறுமியின் கருவைக் கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி..

பாலியல் வன்கொடுமை காரணமாக கர்ப்பம் தரித்த 14 வயது சிறுமியின் கருவைக் கலைக்க அனுமதி கோரி அவரது தாய் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தொடர்ந்து பாதுகாப்புக் காரணங்களைக்கூறி கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அவர் நாடினார்.

இவ்வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. சிறுமியின் உடல்நிலை தொடர்பாக மும்பை சயான் மருத்துவமனை வழங்கிய ஆய்வறிக்கையை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். அதன்படி சிறுமியின் கர்ப்பம் தொடர்ந்தால் அவரின் உடல் மற்றும் மனநிலையில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது பேசிய தலைமை நீதிபதி, குழந்தைகளை காக்க வேண்டிய வழக்குகளில் மிகவும் விதிவிலக்கான வழக்கமாக இதனைக் கருத வேண்டியுள்ளதாகக் கூறினார்.

இனி சிறுமி எதிர்கொள்ள வேண்டிய ஒவ்வொரு மணித்துளியும் மிகவும் முக்கியமானது எனவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து மருத்துவ கருத்தரிப்பு சட்டப்பிரிவு 142 சிறப்பு அதிகார வரம்பை இவ்வழக்கில் பயன்படுத்த, பாதிக்கப்பட்டவருக்கு 14 வயது, பாலியல் கொடுமையால் கர்ப்பம் தரித்தது, குறிப்பிட்ட காலம்வரை கர்ப்பமானது கூட தெரியாமல் சிறுமி இருந்தது உள்ளிட்டவற்றை உற்றுநோக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

தொடர்ந்து கருக்கலைப்புக்கு அனுமதி மறுத்த மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை ஒத்திவைப்பதாகவும் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய சயான் மருத்துவமனைக்கு அனுமதி வழங்கியும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow