நெருக்கமானவர்கள் வருவதில்லை, வெறிசோடி போன தைலாபுர தோட்டம்: தனிமையில் தவிக்கும் ராமதாசு 

தனக்கு நெருக்கமாக இருந்தவர்களை கூட தைலாப்புரம் தோட்டம் பக்கம் எட்டி பார்க்கத்தால் டாக்டர் ராமதாசு தனிமையில் தவித்து வருகிறார். 

Jun 19, 2026 - 16:01
நெருக்கமானவர்கள் வருவதில்லை, வெறிசோடி போன தைலாபுர தோட்டம்: தனிமையில் தவிக்கும் ராமதாசு 
தனிமையில் தவிக்கும் ராமதாசு 

இளைஞரணி பதவி முகுந்தனுக்கு கொடுக்கப்பட்டத்தில் இருந்து ராமதாசு, அன்புமணி இடையே மோதல் வெடித்தது. இருவருக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து ராமதாசு நீக்கினார். ஆனால் தன்னை ராமதாசு நீக்க முடியாது என தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட அன்புமணி.தேர்தல் ஆணையமும் அன்புமணியை தலைவராக அங்கீகாரம் வழங்கியது. 

அதுமட்டுமின்றி மாம்பழ சின்னம் ராமதாசிடம் இருந்து அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதனால் நீதிமன்றத்தில் அன்புமணி மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ராமதாசு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கிலும் ராமதாசுக்கு தோல்வியே மிஞ்சியது. இந்த நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் அன்புமணி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார். இதில் 4 இடங்களில் அன்புமணி தரப்பு வெற்றி பெற்றது. 

அதே நேரம் ராமதாசு சசிகலாவின் புதிய கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தல் சந்தித்து படுதோல்வியை சந்தித்தார். இதனால் ராமதாசு அரசியலில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. வழக்கமாக வியாழக்கிழமை தவறாமல் தைலாபுரத்தோட்டத்தில் ராமதாசு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி வந்தார். ஆனால் தனக்கு நெருக்கமாக இருந்த ஜி.கே.மணி, தீரன், முன்னாள் எம்எல்ஏக்கள் அருள் என யாரும் தைலாபுரம் தோட்டம் பக்கம் எட்டி பார்க்கவில்லை. 

தற்போதைய சூழலில் ராமதாசும், அவரது மூத்த மகள் காந்தியும் தமிழக அரசின் மக்கள் நலன்சார்ந்த பிரச்னைகளுக்கு மட்டும் அறிக்கை வாயிலாக குரல் கொடுத்து வருகின்றனர். இதனால் தைலாபுரம் தோட்டம் பரபரப்பின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow