ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியில் முறைகேடு புகார்- தஞ்சை மாநகராட்சி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
தனது வார்டுக்கு உட்பட்ட நான்கு தெருக்களில் இரண்டு தெருக்களுக்கு எனது சொந்த செலவில் பாதாள சாக்கடை இணைப்பு கொடுத்துள்ளேன் என அதிமுக கவுன்சிலர் பேச்சு
தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி அதிமுக மாமன்ற உறுப்பினர் தீர்மான நகலை தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை மாநகராட்சி கூட்ட அரங்கில் மாதாந்திர கூட்டம் மேயர் சண் இராமநாதன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் தங்கள் வார்டில் உள்ள மக்கள் பிரச்சனைகள் குறித்து பேசினர்.
அப்போது பேசிய, 23வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் கோபால், தனது வார்டில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேறு ஒரு பணிக்கு அந்த பணம் செலவிடப்பட்டுள்ளது என குற்றம்சாட்டினார்.மேலும் தனது வார்டுக்கு உட்பட்ட நான்கு தெருக்களில் இரண்டு தெருக்களுக்கு எனது சொந்த செலவில் பாதாள சாக்கடை இணைப்பு கொடுத்துள்ளேன் என எடுத்துக்கூறினார்.
மக்கள் பிரச்சனைகள் குறித்து மாமன்ற கூட்டத்தில் பேச வேண்டாம் எனக் கூறுகிறீர்கள் என மேயர், ஆணையரை பார்த்து பேசிய கோபால்,
தனியாக வந்து பேசி இருக்கிறேன்.மக்களோடு வந்து பேசி இருக்கிறேன் என் மகன்களோடு வந்து பேசி இருக்கிறேன் என் குடும்பத்தோடு வந்து பேசி இருக்கிறேன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
அப்புறம் எதற்கு தீர்மானம் போடுகிறீர்கள் எனக்கூறி தீர்மான நகலை தூக்கி வீசினார் . பின்னர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு முறைகள் நடந்துள்ளதாகவும், முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மாமன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் அலுவலக வாயில் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள்.இதனால் மாமன்ற கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
What's Your Reaction?