தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு கருப்பு பலூன் பறக்க விட்ட காங்கிரசார் கைது
தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு பலூன் பறக்க காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்துள்ளனர். வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த காங்கிரசு நிர்வாகி ரஞ்சன்குமாரும் தனது வீட்டு மாடியில் இருந்து கருப்பு பலூன் பறக்கவிட்டு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
பிரதமர் மோடியின் தமிழக வருகையை எதிர்க்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி பிரிவின் தலைவர் ரஞ்சன்குமார் கருப்பு பலூன் பறக்கவிட்டு எதிர்ப்பை தெரிவித்துள்ளார். ஏற்கனவே அவர் வீட்டுக்காவலில் லவைக்கப்பட்டுள்ள நிலையில் மாடியில் நின்று காங்கிரஸ் கட்சியினரோடு சேர்ந்து கருப்பு பலூன் பறக்க விட்டு கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதே போல, பிரதமர் மோடி தமிழகம் வருவதையொட்டி எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பாக கருப்புச்சட்டை அணிந்து கருப்புக்கொடி ஏந்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பெரியமேடு மசூதி எதிரே உள்ள அம்பேத்கார் சிலை அருகே வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கவுன்சிலர் டில்லிபாபு தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் கட்சியினர் இந்தி திணிப்பு மும்மொழிக் கொள்கை, பேரிடர் நிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் என மக்களின் அடிப்படை திட்டங்களுக்கு நிதி அளிக்காமலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காததையும் கண்டிக்கும் வகையில் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கருப்பு சட்டை அணிந்து கருப்பு பலூன் எடுத்து வந்து கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அனைவரையும் பெரியமேடு போலீசார் கைது செய்தனர். பிறகு கண்ணப்பர் திடல் சமுதாய நல கூட்டத்தில் தங்க வைத்துள்ளனர்.
இதே பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட இருந்த காங்கிரசு தமிழக எஸ்சி பிரிவு தலைவர் ரஞ்சன் குமாரை போலீசார் நேற்று இரவு வீட்டு சிறையில் வைத்தனர். இந்த நிலையில் தனது வீட்டு மாடியில் இருந்து கருப்பு பலூனை ரஞ்சன்குமார் பறக்கவிட்டு பிரதமர் மோடி வருகைக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
What's Your Reaction?

