பாஜக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழகம் இடம்பெறுமா?... வானதி சீனிவாசன் சொல்வது என்ன?

Mar 4, 2024 - 14:51
Mar 4, 2024 - 16:04
பாஜக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழகம் இடம்பெறுமா?... வானதி சீனிவாசன் சொல்வது என்ன?

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து மாநில கட்சிகளும், தேசியக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதில் மும்மரம் காட்டி வருகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில், திமுக அதன் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீட்டை இறுதி செய்து வரும் நிலையில், விசிக, காங்கிரஸ், மதிமுக கட்சிகளுடன் உடன்பாடு எட்டப்படவில்லை. இதேபோல் அதிமுகவுடன், பாமக, தேமுதிக கூட்டணி வைக்கும் என கூறப்படும் நிலையில், அதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையே பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைமை அறிவித்த நிலையில், தமிழ்நாட்டில் அவர்களின் நிலைபாடு என்ன என்பதை பிற அரசியல் கட்சியினர் உற்றுநோக்கி வருகின்றனர். இந்த நிலையில் தான், பாஜக மையக் குழு கூட்டம் சென்னை கமலாலயத்தில் நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், மூத்த தலைவர்கள் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பது, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் பட்டியல் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், வரும் 6ம் தேதி பாஜக மூத்த தலைவர்கள், பாஜக வேட்பாளர்கள் பட்டியலை டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் சமர்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழக பாஜக வேட்பாளர்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow