"தடை, அதை உடை" முன்னாள் அமைச்சருக்கு எதிராக போராட்டம்... காங்கிரஸை மிரளவிட்ட தனி ஒருவன்!
காங்கிரஸில் பதவி பெற தடங்களாக இருக்கும் முன்னாள் அமைச்சருக்கு எதிராக காங்கிரஸ் அலுவலகத்தில் தனி ஒருவனாக போராட்டம் நடத்தி காங்கிரஸாரை மிரள விட்டுள்ளார் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்.
காங்கிரஸில் பதவி பெற தடங்களாக இருக்கும் முன்னாள் அமைச்சருக்கு எதிராக காங்கிரஸ் அலுவலகத்தில் தனி ஒருவனாக போராட்டம் நடத்தி காங்கிரஸாரை மிரள விட்டுள்ளார் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்.
புதுச்சேரி ஏம்பலம் தொகுதியை சேர்ந்தவர் சத்தியசீலன். இவர் காங்கிரஸ் கட்சியில் சிறப்பு அழைப்பாளராக உள்ளார். கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை சுமார் 29 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருந்து வருகிறார். ஆனால் இவருக்கு எந்த ஒரு பதவியும் வழங்கப்படவில்லை என்றும், பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இவருக்கு அதே வகுப்பைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பதவி கொடுக்க தடையாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சத்தியசீலன் இன்று தனி ஒருவனாக காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தின் நுழைவாயிலில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
"முன்னாள் அமைச்சர் கந்தசாமி, தனக்கு எந்த ஒரு பதவியும் பெறவிடாமல் தடுப்பதாகவும், ஏம்பலம் தொகுதியில் அவரைத் தவிர வேறு யாராவது வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி அணிந்தால் அவருக்கு பிடிப்பதில்லை என்றும், அதனால் தன்னையும் வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி அணிய விடமாட்டுகிறார் என்றும் சத்தியசீலன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், பதவி வழங்க வேண்டும் என்றால் பணம் கேட்கிறார்கள் என்று சொன்ன சத்தியசீலன், கந்தசாமி ரியல் எஸ்டேட் செய்து பணம் வைத்திருக்கிறார்... தன்னிடமும் பணம் உள்ளது. தனக்கும் பதவி வழங்க வேண்டும். பதவி வழங்கினால் தானே பணத்தை செலவு செய்ய முடியும் என முன்னாள் அமைச்சருக்கு எதிராக அவர் போர்க் கொடி தூக்கினார்.
தனி ஒருவனாக பட்டியலின வகுப்பைச் சேர்ந்த சத்தியசீலன் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
What's Your Reaction?