முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை…! நீடிக்கும் சலசலப்பு...

பண்ருட்டியைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ பிரபு மற்றும் அவரது தந்தை அய்யப்பா ஆகியோரின் வீடுகள் உட்பட 9 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

Mar 1, 2024 - 18:20
முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை…! நீடிக்கும் சலசலப்பு...

பண்ருட்டியைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ பிரபு மற்றும் அவரது தந்தை அய்யப்பா ஆகியோரின் வீடுகள் உட்பட 9 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகம் பகுதியில் அதிமுக ஒன்றிய செயலாளர் அய்யப்பா, கடந்த 2001 முதல் 2006 வரை ஒன்றிய குழு பெருந்தலைவராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் அய்யப்பாவின் மனைவி 2006 முதல் 2011ம் ஆண்டுவரை தியாக துருகம் ஒன்றிய குழு துணைப் பெருந்தலைவராக பணியில் இருந்துள்ளார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில், அய்யப்பா மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அய்யப்பாவின் மகனான கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ பிரபு வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.  லஞ்ச ஒழிப்புதுறை காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் தலைமையில் 9 குழுக்களாக 45 க்கும் மேற்பட்ட போலீசார் அய்யப்பா, அவரது மனைவி மற்றும் மகன் பிரபுவிற்கு சொந்தமான பால் பண்ணை, விளையாட்டு கூடம், உறவினர்கள் வீடு என 9 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். 

முன்னதாக, பண்ருட்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.  இந்த் நிலையில், மீண்டும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில்லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுப்பட்டுள்ளது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow