பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் பருத்தி பாதிப்பு-விவசாயிகள் வேதனை
நோய் பரவலை கட்டுப்படுத்த வேளாண்துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செவட்டை நோய் தாக்குதலால், பருத்தி விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம் சுற்றியுள்ள குள்ளப்புரம், எ.வாடிப்பட்டி, கோவில்புரம், மேல்மங்கலம், காமக்காப்பட்டி, ஜெயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் அதிக அளவில் பருத்தியை பயிரிட்டு இருந்தனர்.
பருத்தி நன்றாக வளர்ந்து பிஞ்சுகள் விட்டு காய் பருவமடையும் சூழலில், செவட்டை நோய் தாக்குதலால் முற்றிலும் சேதமடைந்தது. இதனால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. நோய் பரவலை கட்டுப்படுத்த வேளாண்துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்திட வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?