தஞ்சை: போக்குவரத்து கழக பணிமனைக்குள் குடும்பத்துடன் மெக்கானிக் போராட்டம்
அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஒரு மணி நேரம் தாமதத்திற்கு பின்னர் பேருந்து இயக்கப்பட்டது
தஞ்சை ஜெபமாலை அரசு போக்குவரத்து கழக பணிமனைக்குள் மெக்கானிக் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கொட்டும் பனியில் அதிகாலையில் மேலாளரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.இவருக்கு ஆதரவாக தொழிலாளர்களும் பேருந்தை இயக்காமல் வேலை நிறுத்தம் செய்தனர்.
தஞ்சை ஜெபமாலை புரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மணிகண்டன் என்பவர் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.இப்பணிமனையின் கிளை மேலாளர் பிரகாஷ். 'மணிகண்டனுக்கு ஆப்சென்ட் மார்க் போட்டு சம்பள இழப்பு ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
நான்கு மாதங்களாக சம்பளம் இல்லாமல் மணிகண்டன் குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்பட்டு உள்ளார்.இந்த நிலையில், இன்று அதிகாலை கொட்டும் பனியில் மணிகன்டன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்து பணிமனைக்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இவருக்கு ஆதரவாக தொழிலாளர்களும் பேருந்தை இயக்காமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஒரு மணி நேரம் தாமதத்திற்கு பின்னர் பேருந்து இயக்கப்பட்டது.
What's Your Reaction?