கோவிஷீல்டு தடுப்பூசி.. "நாங்க நிறுத்தி ரொம்ப நாளாச்சு.." சீரம் சொன்ன தகவல் !

நூற்றில் 0.1% பேருக்கே பாதிப்பு இருக்கும் என்று மருத்துவர்கள் கூறினர். 

May 9, 2024 - 16:26
கோவிஷீல்டு தடுப்பூசி.. "நாங்க நிறுத்தி ரொம்ப நாளாச்சு.." சீரம் சொன்ன தகவல் !

கோவிஷீல்டு தடுப்பூசி தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில் 2021ஆம் ஆண்டே அந்த தடுப்பூசி தயாரிப்பை நிறுத்திவிட்டதாக இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் தெரிவித்துள்ளது. 

2020ல் கொரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைத்த வேளையில், அதற்கு எதிராக உலக நாடுகளில் பல முன்னனி மருந்து நிறுவனங்கள் தடுப்பூசிகளை தயார் செய்தனர். 

அந்த வகையில், இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் Vaxzervria என்ற தடுப்பு மருந்தை தயாரித்தது. இதை இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம், கோவிஷீல்டு எனப்பெயரிட்டு விற்பனை செய்தது. 

குறிப்பாக 2021- 2022 காலகட்டத்தில் இந்தியர்களால் அதிகப்படியான தடுப்பூசிகள் போடப்பட்டது. அதன்படி 170 கோடி கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் டோஸ்கள் போடப்பட்டுள்ளன. 

இந்நிலையில், சமீபத்திய வழக்கு ஒன்றில் தங்கள் நிறுவன தடுப்பூசியை பயன்படுத்தியவர்களுக்கு இரத்த உறைதல், மாரடைப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம் என ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் தெரிவித்தது. தொடர்ந்து அந்நிறுவனம் Vaxzervria தடுப்பூசிகளின் தயாரிப்புகளை நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது. 

இந்த சர்ச்சை பெரிதாக வெடிக்கவே, கோவிஷீல்டு தடுப்பூசியை எடுத்துக்கொண்டவர்கள் அச்சமடைந்தனர். அதற்கு விளக்கமளித்த மருத்துவர்கள்.  நூற்றில் 0.1% பேருக்கே பாதிப்பு இருக்கும் என்று கூறினர். 

இதனிடையே, இந்தியாவில் Vaxzervria-ஐ கோவிஷீல்டு என தயாரித்த சீரம் நிறுவனம், 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே இதன் தயாரிப்புகளை நிறுத்திவிட்டதாக கூறியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow