உலகம் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம் : தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை: கிறிஸ்துவமக்கள் திரளாக பங்கேற்பு
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இயேசுபிரான் பூமியில் அவதரித்த கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
வேளாங்கன்னியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு விண்மீன் ஆலய வளாகத்தில் குடில் அமைக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில் பேராலய தியான மண்டபம் செல்லும் வழியில் மின் விளக்குகளால் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
பேராலயத்தைச் சுற்றி அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், பேராலயத்தின் முன்பு 43 அடி உயரத்தில் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம் புனிதம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
நேற்று இரவு 11.30 மணிக்கு இயேசு பிறப்பு நிகழ்ச்சி விண்மீன் ஆலயத்தில் நடந்தது. சிறப்பு திருப்பலியைத் தொடர்ந்து குழந்தை இயேசு சொரூபம் வான தேவதைகளால் பவனியாக எடுத்துவரப்பட்டு பேராலய அதிபரிடம் வழங்கப்பட்டது. நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை இயேசு சொரூபத்தை பெற்ற பங்குத்தந்தை அற்புதராஜ், அருகில் உள்ள குடிலில் வைத்து இயேசு பிறந்ததாக அறிவித்தார்.
இந்நிலையில், பேராலய அதிபர் இருதயராஜ், பொருளாளர் உலகநாதன், நிர்வாகத் தந்தை பரிசுத்தராஜ், உதவி பங்குத் தந்தை ஆரோஜேசுராஜ் மற்றும் நிர்வாகத் தந்தையர்கள், அருள் சகோதரிகள், சகோதரர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நாடுமுழுவதும் கோலகலம்
டெல்லியில் உள்ள செயின்ட் தாமஸ்தேவலாயம் வண்ண விளக்குகளால்அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தது.ஜம்மு காஷ்மீரின்ஸ்ரீநகரில் அமைந்துள்ள புனிதகத்தோலிக்க தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் குடில் மின் விளக்குகளால் ஜொலித்தன.
மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டுவீதிகளில் வண்ணவிளக்குகள் தோரணங்களாகவும், பல்வேறுவடிவங்களிலும் அமைக்கப்பட்டிருந்தன.ஆந்திர மாநிலம்விஜயவாடாவில் பிரமாண்டமாகஅமைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம்மற்றும் கிறிஸ்துமஸ் குடில் அனைவரதுகவனத்தையும் ஈர்த்தது.
கர்நாடக மாநிலம் கலபுராகியில்உள்ள செயின்ட் மேரிஸ் தேவலாயம் வண்ண விளக்குகளால் பிராகசித்தது. தெலங்கானாவின் செகந்திரபாத் செயின்ட் மேரிஸ்பெசிலிகா தேவாலயத்தில் கிறிஸ்துமஸ்சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கனககுன்றுபொழுது போக்கு பூங்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டுநடைபெற்ற கண்காட்சியை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
தமிழகத்திலும் உற்சாக கொண்டாட்டம்
சென்னை சாந்தோமில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்புமிக்க புனித தோமையார் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை நடைபெற்றது. ஆயிரக்கனக்கான கிறிஸ்தவ மக்கள் புத்தாடை அணிந்து குடும்பத்துடன் பங்கேற்று உலக மக்களின் நன்மைக்காக பிரார்த்தனை செய்தனர்.
மேலும், ஒருவருக்கொருவர் கைகுலுக்கி தங்களது வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். மேலும் குறிப்பாக சென்னை சாந்தோம் புனித தோமையார் தேசிய தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி 25 அடி உயர கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டிருந்தது. பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி கிறிஸ்துமஸ் நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. தொடர்ந்து கிறிஸ்துமஸ் கேக் வெட்டி பகிர்ந்தளிக்கப்பட்டது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் தேவாலாயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மத வேறுபாட்டை கடந்து, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பலரும் குடும்பத்தினருடன் பங்கேற்று உற்சாகமடைந்தனர்.
டெல்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி
பிரதமர் மோடி இன்று காலை தில்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்திற்கு சென்று பிரார்த்தனை செய்தார். அங்கு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைக் கூட்டத்தில் மக்களுடன் கலந்துகொண்டார். கிறிஸ்துமஸ் பாடல்கள், பிரதமர் மோடி வருகையையொட்டி அவருக்கான பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் அங்குள்ள அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "தில்லியில் உள்ள பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருப்பலியில் கலந்துகொண்டேன். அன்பு, அமைதி மற்றும் கருணை என காலத்தால் அழியாத செய்திகளை இந்த கூட்டம் பிரதிபலித்தது. கிறிஸ்துமஸின் உணர்வு நம் சமூகத்தில் நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் ஊக்குவிக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?

