3 மணி நேரத்தில் டிட்வா புயல் உருவாகிறது : சென்னை உள்பட 7 துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்
அடுத்த 3 மணி நேரத்தில் டிட்வா புயல் இலங்கை கடற்பகுதியில் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல், இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புதன்கிழமை (நவ. 26) காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு இலங்கை, இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவியது.
புதன்கிழமை நள்ளிரவு வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகர்ந்து வருகின்றது.
சென்னையில் இருந்து 730 கிலோ மீட்டர் தொலைவில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 17 கி.மீ. வேகத்தில் நகர்கிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து 640 கி.மீ தெற்கு, தென்கிழக்கில் புயல் மையம் கொண்டுள்ளது. அடுத்த 3 மணிநேரத்தில் உருவாகிறது டிட்வா புயல் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதேபோல், பாம்பன் மற்றும் ராமேசுவரம் ஆகிய 2 துறைமுகங்களில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
What's Your Reaction?

