சூடுபிடிக்கும் மக்களவைத் தேர்தல்... திமுக, அதிமுக வேட்பாளர் நேர்காணல் விறுவிறுப்பு...

Mar 10, 2024 - 11:20
சூடுபிடிக்கும் மக்களவைத் தேர்தல்... திமுக, அதிமுக வேட்பாளர் நேர்காணல் விறுவிறுப்பு...

விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு தங்களது கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் திமுக, அதிமுக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 

திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் கிட்டத்தட்ட தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்துள்ள நிலையில் திமுக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை அளித்தவர்களிடம் இன்று நேர்காணலை தொடங்கி உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேர்காணலானது நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக சேலம், பொள்ளாச்சி பகுதிகள் சார்பில் விருப்ப மனு அளித்த திமுகவினரிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது. 

இதேபோல் அதிமுக சார்பில் அக்கட்சியில் விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்றும் (மார்ச் 10), நாளையும் (மார்ச் 11) என இரண்டு நாட்கள் நேர்காணல் நடைபெறுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணலானது நடைபெற்று வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow