2-வது நாளாக முகாமிட்டுள்ள திமுக தேர்தல் அறிக்கை குழு...
திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு சென்னையில் இரண்டாவது நாளாக முகாமிட்டு பல்வேறு தரப்பினரிடம் இருந்து பரிந்துரைகளைப் பெற்று வருகின்றனர்.
2024 மக்களவை தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் பிப்ரவரி 5 ஆம் தேதி தூத்துக்குடியில் தொடங்கி, தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக நேற்று திங்கட்கிழமை (26.02.2024) செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களைச் சந்தித்துப் பரிந்துரைகளைப் பெற்றனர். இந்நிலையில், இன்று செவ்வாய்கிழமை (27.02.2024) பிற்பகல் 3 மணியளவில் கலைஞர் அரங்கத்தில் வைத்து திமுகவின் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட மக்களை நேரில் சந்தித்து பரிந்துரைகளைப் பெற உள்ளனர்.
இதுவரை தொலைப்பேசி வாயிலாக 18,000-க்கும் மேற்பட்ட அழைப்புகளும், 2,500-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள், சமூக ஊடகங்கள் வாயிலாக 4,000-க்கும் மேலான பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளது. திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு 500-க்கும் மேற்பட்ட கடிதங்கள் வாயிலாகவும் மக்கள் பரிந்துரைகளை அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?