திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் தொடர் இழுபறி: மா.கம்யூ, விசிக, மநீம சீட் ஒதுக்குவதில் சிக்கல் 

திமுக கூட்டணியில் மா.கம்யூ, விசிக, மநீம ஆகிய கட்சிகள் அதிக இடம் கேட்டு வருவதால் தொகுதி பங்கீட்டில் தொடர் இழுபறி நீடித்து வருகிறது. 

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் தொடர் இழுபறி: மா.கம்யூ, விசிக, மநீம சீட் ஒதுக்குவதில் சிக்கல் 
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் தொடர் இழுபறி

கூட்டணியில் இணைந்துள்ள புதிய கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டியிருப்பதால், கூடுதல் தொகுதிகள் தரமுடியாது, மாறாக இந்த முறை தொகுதிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்படும் என்று தி.மு.க. கூறியதால், கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி ஆகின.

ஆனால்  காங்கிரஸ் கட்சி கடந்த முறையைவிட 3 தொகுதிகள் கூடுதலாக, அதாவது 28 இடங்களை பெற்றுக்கொண்டது. இதேபோல், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி போராடினாலும், ம.தி.மு.க.வுக்கு 2 தொகுதிகள் குறைவாகவும் (4), இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 1 தொகுதி குறைவாகவும் (5) திமுக ஒதுக்கியது. 

தற்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகியவை கூடுதல் தொகுதிகளுக்காக தி.மு.க. தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஆனால் மா.கம்யூ 5 , விசிக 6, மநீம 2 என திமுக திட்டமிட்டுள்ளது. மநீம உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கவும் அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால் டார்ச்லைட் சின்னத்திலேயே போட்டியிடுவோம் என மநீம பிடிவாதமாக உள்ளார். 

ஆனால் கடந்த முறை போட்டியிட 6 தொகுதிகளை விட அதிக தொகுதிகள் வேண்டும் என மா.கம்யூ கட்சி பிடிவாதமாக உள்ளது. அதே போன்று விசிகவும் 10 தொகுதிகள் வேண்டும் என திமுக தலைமையிடம் கறாராக சொல்லிவிட்டது.மநீம-கட்சியும் தங்களுக்கு குறைந்த பட்சம் 5 தொகுதியும் டார்ச் லைட் சின்னத்தில் மட்டுமே போட்டியிடுவோம் எனவும் தெரிவித்து வருகிறது. 

ஆனால், தே.மு.தி.க. வந்ததால்தான், தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய 3 கட்சிகளும் தங்களுடைய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றன. குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொள்ளலாமா?, அல்லது வேறு முடிவு எடுக்கலாமா? என்று யோசித்துக் கொண்டு இருப்பதால், தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow