அதிரடி மன்னன் டேவிட் வார்னர் அபார சாதனை!

Feb 13, 2024 - 21:46
அதிரடி மன்னன் டேவிட் வார்னர் அபார சாதனை!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 81 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர் அபார சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், 37 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி தோல்வியை தழுவியது. எனினும் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றி உள்ளது.

மேலும், இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 49 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், டி20 போட்டிகளில் 12,000 ரன்கள் கடந்த 5ஆவது வீரர் என்ற பெருமையையும், முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். மேலும், அதிவேகமாக 12,000 ரன்களை குவித்தவர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் இரண்டாவது இடத்தில் உள்ளார். 369 போட்டிகளில் வார்னர் இந்த சாதனையை படைத்துள்ள அதே நேரத்தில் கிறிஸ் கெயில் 353 போட்டிகளில் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் 4ஆவது இடத்தை பிடித்துள்ளார். அந்த வகையில், Universe Boss என்று அழைக்கப்படும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் கிறிஸ் கெயில் 14,562 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். 13,096 ரன்களுடன் சோயப் மாலிக் இரண்டாவது இடத்திலும், 12,625 ரன்களுடன் கீரன் பொல்லார்ட் மூன்றாவது இடத்திலும், 12,033 ரன்களுடன் டேவிட் வார்னர் நான்காவது இடத்திலும், 12,089 ரன்களுடன் அலெக்ஸ் ஹேல்ஸ் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். இந்தியாவின் விராட் கோலி 12,000 ரன்களை தொட இன்னும் ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. இதுவரை அவர், 11,994 ரன்கள் எடுத்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow