RCB பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற உள்ள வாய்ப்புகள் என்ன?

ஆர்சிபி அணி 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், வழக்கம் போல ஆர்சிபி ரசிகர்கள், கையில் கால்குலேட்டர் உடன் சுற்ற ஆரம்பித்துவிட்டார்கள்.

Apr 26, 2024 - 17:58
RCB பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற உள்ள வாய்ப்புகள் என்ன?

ஆர்சிபி அணி, இதுவரை விளையாடிய 9 ஆட்டங்களில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.  இந்த நிலையில், கணித மேதைகளுக்கே டஃப் கொடுக்கும் கால்குலேசன்ஸ் உடன், பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு ஆர்சிபி முன்னேறுவதற்கு உள்ள வாய்ப்புகளை பட்டியலிட்டு,  ஆர்சிபி ரசிகர்கள் களமாடி வருகின்றார்கள். ஆர்சிபி அணி,  பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறுவதற்கு உள்ள வாய்ப்புகள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.

ஆர்சிபி தனக்கு மீதமுள்ள 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும். அப்படி நடந்து, மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளும் அதற்கு சாதகமாக அமையுமானால், நெட் ரன்ரேட் பற்றிய கவலையின்றி, பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும்.

முதலாவதாக, புள்ளிகள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இருக்கும் RR, KKR, SRH அணிகள் இனிவரும் ஆட்டங்களில் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்த வேண்டும்.  அதுபோல, புள்ளிகள் பட்டியலில் நடுவரிசையில் உள்ள அணிகள், வழக்கம் போல சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

RR அணி, மீதமுள்ள 6 ஆட்டங்களில், 4-ல் வெற்றிபெற்றாக வேண்டும்; KKR மற்றும் SRH அணிகள், 7 ஆட்டங்களில் 5-ல் வெற்றிபெற வேண்டும். இதன் காரணமாக RR, KKR, SRH அணிகளின் புள்ளிகள் முறையே, 22, 20, 20 என்று இருக்கும். அப்போது, RCB அணி 14 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறும். பிற அணிகள் 12 அல்லது அதற்கும் குறைவான புள்ளிகள் உடைய CSK உள்ளிட்ட பிற அணிகள், பிளேஆஃப்ஸ் சுற்றில் இருந்து வெளியேற்றப்படும்.

இத்தனை தடைகளையும் கடந்து RCB அணி,   பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறி, கோப்பையை வென்று விராட் கோலிக்கு பரிசளிக்குமா?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow