டி20 உலக கோப்பை இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு: கில் அவுட்… இஷான் இன்: யார் யாருக்கு எல்லாம் அணியில் இடம் !

பிப்ரவரி மாதம் தொடங்க உள்ள  ‘டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை - 2026’ தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணியை சூர்யகுமார் யாதவ் கேப்டனாக வழிநடத்துகிறார். துணை கேப்டனாக அக்சர் படேல் அறிவிக்கப்பட்டுள்ளார். 

டி20 உலக கோப்பை இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு: கில் அவுட்… இஷான் இன்: யார் யாருக்கு எல்லாம் அணியில் இடம் !
T20 World Cup Indian Cricket Team Announcement

டி 20 உலக கோப்பை கிரிக்கெட்  தொடர் 2026-ம் ஆண்டு பிப்​ர​வரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இந்தியாவும், இலங்கையும் இணைந்து இந்தத் தொடரை நடத்துகிறது. ஒரு மாதம் நடை​பெறும் இந்த டி20 கிரிக்​கெட் தொடரில் மொத்​தம் 55 ஆட்​டங்​கள் நடை​பெறுகின்​றன. இதில் மொத்தம் 20 அணி​கள் பங்கேற்கின்றன. இவை 4 பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளன. ஒவ்​வொரு பிரி​விலும் 5 அணி​கள் இடம் பெற்​றுள்​ளன.

‘ஏ’ பிரி​வில் நடப்பு சாம்பியன் இந்​தி​யா மற்றும் பாகிஸ்​தான், நமீபி​யா, நெதர்​லாந்​து, அமெரிக்கா ஆகிய அணி​கள் இடம் பெற்​றுள்​ளன. ‘பி’ பிரி​வில் தொடரை நடத்தும் மற்றொரு அணியான இலங்கை மற்றும் ஆஸ்​திரேலி​யா, அயர்​லாந்​து, ஓமன், ஜிம்பாப்வே அணி​களும் உள்​ளன. 

இந்நிலையில், இந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ).

 இந்திய அணி விவரம்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல் (துணை கேப்டன்), ரிங்கு சிங், ஜஸ்ப்ரீத் பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்).

இந்த அணியில் கில் நீக்கப்பட்டு  இஷான் கிஷன் இடம்பெற்றுள்ளார்.அதே போன்று தமிழக வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இருவர் அணியில் இடம் பெற்றுள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow