பொல்லார்ட் அதிரடி - ஆஸி.யை வீழ்த்தியது வெ.இண்டீஸ்

Feb 13, 2024 - 21:11
Feb 13, 2024 - 21:16
பொல்லார்ட் அதிரடி - ஆஸி.யை வீழ்த்தியது வெ.இண்டீஸ்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது.

ஜான்சன் சார்லஸ் (4), நிகோலஸ் பூரன் (1), கெய்ல் மேயர்ஸ் (11) மூவரும் அடுத்து வெளியேற 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. பிறகு ரோஸ்டன் சேஸ் (37), ரோவ்மென் பொவெல் (21) இருவரும் சிறிது நேரம் தாக்குப்பிடித்தனர். 8.4 ஓவர்களில் 79 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற நிலையில் ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கீரன் பொல்லார்ட் மற்றும் ரூதர்ஃபோர்ட் இணை ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை துவம்சம் செய்தது.

அபாரமாக ஆடிய ஆண்ட்ரே ரஸ்ஸல் 29 பந்துகளில் [7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்] 71 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதேபோல ரூதர்ஃபோர்ட் 40 பந்துகளில் [5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்]  67 ரன்கள் எடுத்து கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது.

221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 49 பந்துகளில் 81 ரன்கள் எடுத்திருந்தபோதும், மற்ற வீரர்கள் சோபிக்காததால் தோல்வியை தழுவியது. எனினும் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow