ஐக்கிய அரபு அமிரகத்தில் முதல் இந்து கோயில் - பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
இந்திய நேரப்படி காலை 9 மணி முதல் 11 மணி வரை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அபிதாபியில் இந்து கோவிலை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
பிரதமர் மோடி 2 நாள் அரசுப் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார்.அங்கு அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயத் அல் நஹ்யானை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
சமீபத்தில் அயோத்தியில் ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்து, பால ராமர் சிலைக்கு பிரதிஷ்டை செய்தார்.இதனைத்தொடர்ந்து இன்று (பிப்.14ஆம் தேதி) அபுதாபியில் இந்து கோவிலை திறந்து வைக்கிறார்.இந்த நிகழ்ச்சி இந்திய நேரப்படி காலை 9 மணி முதல் 11 மணி வரை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு பிரதமர் மோடி அபுதாபி சென்றிருந்தபோது, இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அபுதாபியில் கோவில் கட்ட 13.5 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தார். இதனுடன் 13.4 ஏக்கர் நிலத்தை ஐக்கிய அரபு அமீரகம் அரசாங்கம் கூடுதலாக 2019ஆம் ஆண்டு கொடுத்தது. இதையடுத்து இந்து கோவில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கோவில் கட்ட அரசு சார்பில் நிதியுதவியும் வழங்கப்பட்டது. இந்த கோவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. கோவிலில் 7 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடும் வெப்பத்தை தாங்கும் அளவில் கோவில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
அயோத்தி பால ராமர் கோயிலை தொடர்ந்து பிரதமர் மோடி இன்று அபுதாபியில் இந்து கோவில் திறக்கப்பட உள்ளது இந்தியர்களிடையே பெரும் எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து கோவில் அபுதாபியில் திறக்கப்படுவதன் மூலம் இருநாட்டுக்கும் இடையே நல்லுறவும், ஐக்கிய அமீரகம் சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நிகழும் என கூறப்படுகிறது.
What's Your Reaction?