ஆட்சி அமைப்பதில் தாமதம்: பாஜக தூதுவராக சென்ற ரஜினி, திமுக-அதிமுக கைகோர்ப்பா?

ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், திமுக, அதிமுக கைகோர்த்து ஆட்சி அமைக்க காய் நகர்த்தி வருவதாக தகவல் பரவி வருகிறது. இது தமிழக மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஆட்சி அமைப்பதில் தாமதம்: பாஜக தூதுவராக சென்ற ரஜினி, திமுக-அதிமுக கைகோர்ப்பா?
பாஜக தூதுவராக சென்ற ரஜினி

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களை கைப்பற்றியது. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்துள்ள நிலையில், தற்போதுள்ள தவெகவின் பலம் 112 ஆக உள்ளது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், மற்ற கட்சிகள் தவெகவுக்கு இன்னும் ஆதரவு கொடுக்கவில்லை. இதனால், அக்கட்சி ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. 

பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் விஜய் வராத சூழலில் அவரை ஆட்சியமைக்க வரும்படி கவர்னர் அழைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையே, தி.மு.க. ஆதரவுடன் ஆட்சி அமைக்க அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. நேற்றைய தினம் நடிகர் ரஜினிகாந்த் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசியிருந்தார்.

பாஜக தூதராகவே ரஜினி, ஸ்டாலினை சந்தித்தாக சொல்லப்படுகிறது. விஜய் காங்கிரசுடன் கைகோர்த்தால் தென் தமிழகத்தில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் திமுக, அதிமுகவை இணைந்து ஆட்சி அமைக்க பாஜக விரும்புவதாகவும், இந்த தகவலை ஸ்டாலினிடம் பாஜக தூதுவராக ரஜினி கூறியதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அதற்கேற்ப த.வெ.க.வுக்கு ஆதரவு கிடையாது என்று அ.தி.மு.க. தெரிவித்து விட்டது. இதனை அடுத்து. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை புதுச்சேரியில் சொகுசு விடுதியில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.

இதனை தொடர்ந்து, அ.தி.மு.க.வுக்கு தேவையான ஆதரவை வெளியில் இருந்து தி.மு.க. அளிக்கும் என்றும் எதிர்க்கட்சியாக செயல்பட அக்கட்சி முடிவு செய்துள்ளது என்றும் தகவல் தெரிவிக்கின்றது. இதனால், தமிழக அரசியலில் பரபரப்பு நீடித்து வருகிறது.இந்த நிலையில், அதிமுகவில் புதிய எம்.எல்.ஏ.க்களாக தேர்வு செய்யப்பட்டவர்களை புதுச்சேரி அழைத்து சென்று அங்கு தங்க வைக்க முடிவு செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் புதுச்சேரியில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow