இனிக்க இனிக்க பேசி விவசாயிகளை ஏமாற்றிவிட்டனர்..... த.வெ.க. அரசை தாக்கிய எடப்பாடி!
தவெக அரசின் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளை ஏமாற்றி விட்டது இந்த அரசு என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில் முதல் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்ற வருகிறது.
இந்த வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக அரசின் வாக்குறுதிகள் குறித்து எந்த வொரு அறிவிப்பும் குறிப்பாக 100 சதவிகித பயிர்க்கடன் தள்ளுபடி, கரும்புக்கான ஆதார விலை ரூ. 4,500 ஆக உயர்த்துவது இப்படி எதுவும் வெளியாகவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.
முந்தைய திமுக ஆட்சியைப் போல வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் நாடகம் போட்டிருக்கிறது தவெக அரசு. இனிக்க, இனிக்க பேசி விவசாயிகளை ஏமாற்றிவிட்டது தவெக அரசு.
மேலும் சுமார் இரண்டரை மணிநேரம் வேளாண் பட்ஜெட்டில் எந்தவொரு புதிய திட்டமும் இல்லதாதது விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக பழனிசாமி தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து நெல் குவிண்டாலுக்கு ரூ 3,500 என்ற வாக்குறுதி என்ன ஆனது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
What's Your Reaction?

