பாஜக வேட்பாளர் உத்தேசப் பட்டியலுடன் டெல்லி பயணம்... பெண் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை.. அண்ணாமலை விளக்கம் !

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் உத்தேசப் பட்டியலுடன் டெல்லி செல்வதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

Mar 6, 2024 - 11:42
பாஜக வேட்பாளர் உத்தேசப் பட்டியலுடன் டெல்லி பயணம்... பெண் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை.. அண்ணாமலை விளக்கம் !

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் பட்டியல் என மும்முரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்த நிலையில், இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று(06.03.2024) கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இறுதியாக தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களின் உத்தேச பட்டியலை இன்று டெல்லி கொண்டு செல்ல இருப்பதாகவும், அடுத்த தேசிய தலைமை பட்டியல் வெளியிடும் போது தமிழக வேட்பாளர்கள் பட்டியல் வரலாம் எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம், மத்திய சென்னை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், 39 தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து, இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவில் சார்பில் அதிக பெண் வேட்பாளர் அறிவிக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow