மீண்டும் வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்த்? தந்தையுடன் வந்து விருப்ப மனு தாக்கல்...
மீண்டும் வேலூர் தொகுதியில் போட்டியிட தந்தை துரைமுருகனுடன் அறிவாலயம் சென்று கதிர் ஆனந்த் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழ்நாட்டில் மாநிலக் கட்சிகள், விருப்ப மனுக்களை பெற்று வருகிறது. குறிப்பாக திமுகவில் பலரும் தங்களுக்கு விருப்பமான தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கக் கோரி மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு கனிமொழி எம்.பி. மீண்டும் தூத்துகுடியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்திருந்தார். அந்த வரிசையில் தற்போது கதிர் ஆனந்த் மீண்டும் வேலூர் தொகுதியில் போட்டிட விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளார்.
திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனுடைய மகன் கதிர் ஆனந்த் வேலூர் மக்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வேலூரில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தந்தை துரைமுருகனுடன் அறிவாலயம் சென்று கதிர்ஆனந்த் விருப்ப மனுவை அளித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா கூட்டணிக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். கடந்தமுறை அதிகார துஷ்பிரயோகம் இருந்ததால் தேர்தலின் போது குழப்பம் ஏற்பட்டதாகவும், இருந்தாலும் திமுக வெற்றி பெற்றதைப் போல, இந்தமுறையும் திமுக நிச்சயம் வெற்றி பெறும் எனவும் அவர் கூறினார்.
What's Your Reaction?