மத்திய அரசை கண்டித்து நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் தோழமைக் கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு உரிய நிதி ஒதுக்காதது, வெள்ள நிவாரணம் வழங்காததை கண்டித்து நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் தோழமைக் கட்சி எம்பிக்கள் கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Feb 8, 2024 - 11:58
மத்திய அரசை கண்டித்து நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் தோழமைக் கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்

கடந்த டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகின. தொடர்ந்து இதனை தேசிய பேரிடராக அறிவித்து 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். தொடர்ந்து மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு உரிய நிதி அளிக்கவில்லை எனவும் மாநில அரசு குற்றம்சாட்டியது. 

இந்நிலையில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு போதிய நிதி ஒதுக்காததை கண்டித்தும் வெள்ள நிவாரணம் வழங்காததை எதிர்த்தும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திமுக மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பிக்கள் கருப்பு உடையணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.பிக்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், திருச்சி சிவா உள்ளிட்டோரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசனும், காங்கிரசின் ஜோதிமணி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow