சென்னையில் பஞ்சுமிட்டாயால் கேன்சர் ஏற்படும் அபாயம்-உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

வேதிப்பொருள் கலந்த பஞ்சுமிட்டாய்களை சாப்பிடும் குழந்தைகளுக்கு புற்றுநோய் உண்டாகும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

Feb 8, 2024 - 12:31
சென்னையில் பஞ்சுமிட்டாயால் கேன்சர் ஏற்படும் அபாயம்-உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

சென்னையில் நிறம்வூட்டப்பட்ட பஞ்சுமிட்டாய் விற்பனை செய்யப்படும் இடங்கள் மற்றும் தயாரிப்பு இடங்களில் சோதனை நடத்த உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் அரசால் தடை செய்யப்பட்ட வேதிப்பொருள் கலந்த பஞ்சுமிட்டாய் தயாரிக்கப்பட்டதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.இந்த நிலையில், சென்னையில் பஞ்சுமிட்டாய் விற்கப்படுவது குறித்தும் அதை தயாரிக்கும் இடங்கள் மற்றும் வடமாநிலத்தவரின் கிடங்குகளை சோதனை நடத்த உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

குறிப்பாக புதுச்சேரி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பஞ்சுமிட்டாய்களை ஆய்வு செய்ததில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் (Rhodamine b)என்ற ரசாயன பொருட்களைக் கொண்டு பஞ்சுமிட்டாய்களை தயாரிப்பது தெரியவந்துள்ளது.இதனால் குழந்தைகளுக்கு புற்றுநோய் உண்டாகும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

இதன்காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பஞ்சு மிட்டாய் தயாரிக்கும் இடங்களில் அரசின் விதிகள், சுகாதாரம் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.இதனால் விதிமீறல் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow