நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை தகுதி நீக்கம் செய்க: இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் மனு
மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் தீர்மான நோட்டீசை மக்களவை சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் கல்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவர ‘இந்தியா’ கூட்டணி திட்டமிட்டு உள்ளது.
சர்ச்சைக்குரிய திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதன்படி தீபம் ஏற்றச்சென்றபோது அங்கு பிரச்சினை ஏற்பட்டது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் நீதிபதி சுவாமிநாதன் சர்ச்சை தீர்ப்பை வழங்கியதாக தமிழக அரசு குற்றம்சாட்டி இருந்தது.
இந்த நிலையில், இன்றைய மக்களவை கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, ஓம் பிர்லாவை அவரது அறையில் சந்தித்த இந்தியா கூட்டணி எம்பிக்கள், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்க தீர்மான நோட்டீஸை அவரிடம் வழங்கினர்.
அப்போது, திமுக மூத்த தலைவர்கள் கனிமொழி, டி.ஆர்.பாலுவுடன், சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர்.
திமுக, காங்கிரஸ், சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 100 மக்களவை எம்பிக்கள், 50 மாநிலங்களவை எம்பிக்கள் தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
What's Your Reaction?

