மதுரைக்கு தேவை வளர்ச்சியா அல்லது அரசியலா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
மதுரைக்கு தேவை வளர்ச்சியா அல்லது அரசியலா என முதல்வர் தனது எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடு திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உள்ள மலை மீது அமைந்துள்ள தீபத்தூணில் இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆனால், ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டும் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. அதற்கு மாறாக மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
இதனால் திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தமிழகத்தில் தற்போது பேசுபொருளாகவும் மாறியுள்ளது.
இந்த நிலையில், ”மாமதுரைக்குத் தேவை வளர்ச்சியா அல்லது ……….. அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள்.
மெட்ரோ ரயில், எய்ம்ஸ், புதிய தொழிற்சாலைகள் மற்றும் வேலைவாய்ப்புகள்தான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது!” என தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
What's Your Reaction?

