தலைநகரில் 8 எம்எல்ஏக்களுக்கு கல்தா: புதுமுகங்களை களமிறக்க அறிவாலயம் திட்டம் 

சென்னை மாவட்டத்திற்கு உள்பட சட்டமன்ற தொகுதிகளில் தற்போது சிட்டிங் திமுக எம்எல்ஏக்கள் 8 பேருக்கு கல்தா கொடுக்க திமுக தலைமை முடிவு செய்திருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தலைநகரில் 8 எம்எல்ஏக்களுக்கு கல்தா: புதுமுகங்களை களமிறக்க அறிவாலயம் திட்டம் 
தலைநகரில் 8 எம்எல்ஏக்களுக்கு கல்தா

2-வது முறையாக வெற்றி ஆட்சியை தொடர வேண்டும் என்ற வகையில் திமுக தேர்தல் வியூகம் வகுத்து வருகிறது. அந்த வகையில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பணிகளில் ஜெட் வேகத்தில் திமுக செயல்படுத்தி வருகிறது. தேர்தல் அறிக்கை, வேட்பாளர் தேர்வு, தொகுதி பங்கீடு என அறிவாலயம் படுபிஸியாக இயங்கி வருகிறது. 

வேட்பாளர் தேர்வை பொறுத்தவரை பென் நிறுவனம் சார்பில் சிட்டிங் எம்எல்ஏக்கள் செயல்பாடு குறித்து திமுக தலைவர் ஸ்டாலினிடம் ரிப்போர்ட் கொடுத்துள்ளது. அந்த ரிப்போர்ட்டின் அடிப்படையில் மீண்டும் யார் யாருக்கு வாய்ப்பு வழங்குவது என ஸ்டாலின் டிக் அடித்து வருகிறாராம். தவெகவின் வருகை, விஜயின் இளைஞர் செல்வாக்கை சமாளிக்கும் வகையில் தேர்தல் வியூகத்தை அறிவாலயம் வகுத்து வருகிறது. 

அந்த வகையில் தலைநகர் சென்னையில் உள்ள தொகுதிகளில் அரசியல் வாரிசுகள் அல்லாத புதுமுகங்களாக இளைஞர்களை களமிக்க ஸ்டாலின் திட்டமிட்டு இருக்கிறாராம். கடந்த சட்டமன்ற தேர்தலில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 15 தொகுதிகளில் திமுக போட்டியிட்டது. 

அதில் கொளத்தூர் - ஸ்டாலின், ஆயிரம் விளக்கு - எழிலன் நாகநாதன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி- உதயநிதி, துறைமுகம்-சேகர்பாபு, சைதாப்பேட்டை-மா.சுப்பிரமணியன்,  பெரம்பூர் ஆர்.டி.சேகர், வில்லிவாக்கம் வெற்றியழகன் ஆகிய தொகுதிகளில் கடந்த முறை போட்டியிடவர்களே மீண்டும் களமிறங்க உள்ளனர். 

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் என்ற அழைக்கப்படும் ஆர்.கே.நகர் தொகுதியில் தற்போது சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் எபினோசர் செயல்பாடு மீது திமுக தலைமை அதிருப்தியில் உள்ளது. அதனால் செய்தி தொடர்பு துணைச் செயலாளர் டாக்டர் செய்யது ஹஃபீஸ் திமுக தலைமை வாய்ப்பளிக்க உள்ளதாக தெரிகிறது. 

திரு.வி.க.நகர் (தனி) தொகுதியில் மேயர் ப்ரியா, எழும்பூர் (தனி) தமிழன் பிரசன்னா, ராயபுரம் ,அண்ணா நகர் தற்போது சிட்டிங் எம்எல்ஏ மோகன் மகன் கார்த்திக், விருகம்பாக்கம் தொகுதியில் கேகேநகர் தனசேகரன், தியாகராய நகர் வி.பி.கலைராஜன், வேளச்சேரி துணை மேயர் மகேஷ் ஆகியோருக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow